போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஏழாவது நாளாக நீடித்து வரும்நிலையில், சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு மசோதாவை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

ஊதிய உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடந்த வியாழக்கிழமை (ஜன.4) முதல், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் ஏழாவது நாளாக புதன்கிழமை (இன்றும்) தொடர்கிறது.

bus-11

போக்குவரத்துத் தொழிலாளர்கள், குடும்பத்தினருடன் திரண்டு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகங்கள், கோட்டங்கள், பணி மனைகள் முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனைத்தொடந்து பொங்கல் பண்டிக்காக வெளியூர் செல்லும் பயணிகளின் நிலைமையும் கேள்விக்குறியாகியுள்ளது.

இதனிடையே சட்டப்பேரவையில் புதன்கிழமை (இன்று), சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதிய உயர்வு மசோதாவை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இதனால் சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் 55 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சத்து ஐந்தாயிரமாக உயரும்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்