ஜியோமி தனது புதிய ரெட்மி ஸ்மார்ட்போனை சாம்சங்கின் 1/7″ 0.8-மைக்ரோமீட்டர் (μm) 64 எம்.பி.ISOCELL பிரைட் GW1 சென்சாருடன் அறிமுகம் செய்கிறது. 

இந்த 64 எம்.பி. சென்சார்  48 எம்.பி. சென்சாரை விட 38 சதவிகித அளவு பெரியது. இது புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் 9248×6936 பிக்சல் ரெசல்யூஷனில் புகைப்படங்களை வழங்கும். இந்தப் புகைப்படங்களைக் கொண்டு 3.26 மீட்டர் (244 செ.மீ.x326 செ.மீ) அளவுள்ள ஒரு வால் போஸ்டரை மிகத் தெளிவாக அச்சிட முடியும்.

இந்த சென்சார் 1.6μm பிக்சல்களை 4-இன்-1 பிக்சல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறைவான வெளிச்சமுள்ள பகுதிகளிலும் அதிக தரமுள்ள புகைப்படங்களை எடுக்க வழி செய்யும். இதன் ஸ்மார்ட் ஐ.எஸ்.ஒ. டூயல் கன்வெர்ஷன் கெயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஐ.எஸ்.ஒ. தரத்தை மேம்படுத்துகிறது.

மேலும், எதிர்காலத்தில் 100 எம்.பி. அல்ட்ரா க்ளியர் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் முன்னணி நிறுவனங்ளில் ஒன்றாக இருக்கும் என ஜியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது சாம்சங் நிறுவனத்தின் 108 எம்.பி. ISOCELL சென்சார் கொண்டிருக்கும். இது 12032×9024 பிக்சல் தரத்தில் புகைப்படங்களை வழங்கும் திறனுடையதாக இருக்கும்.

ரெட்மியின் 64 எம்.பி.கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்இந்தியாவில் 2019 அக்டோபர் மாதத்திலோ அல்லது டிசம்பர் மாதத்திலோ அறிமுகமாகும் எனதெரிகிறது.