6000 எம்ஏஹெச் பேட்டரி: 64 எம்பி கேமரா: வெளியானது போக்கோ எக்ஸ்3

Poco X3 comes with up to 8GB of LPDDR4X RAM and up to 128GB of onboard storage. The phone is offered in two colour options.

0
90

போக்கோ பிராண்டு தனது போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் இந்தியாவில்  இன்று(செப்டம்பர் 22) அறிமுகம் செய்யப்பட்டது.

முன்னதாக இதே ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த மாடலில் 6.67 இன்ச் ஃபுல்ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், பன்ச்-ஹோல் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர், லிக்விட் கூலிங் 1.0 பிளஸ் மற்றும் காப்பர் ஹீட் பைப், டூயல் கிராஃபைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

poco-x3-nfc-1599561982391

ஆண்ட்ராய்டு 10 சார்ந்த எம்ஐயுஐ 12 கொண்டிருக்கும் போக்கோ எக்ஸ்3 மாடலில் 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ கேமரா, 2 எம்பி போர்டிரெயிட் கேமரா மற்றும் 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் போக்கோ எக்ஸ்3 இந்திய வேரியண்ட் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்காக ஐபி 53 சான்றளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில்போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போனை விலை மற்றும் விற்பனை தேதி:

போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போனின்பேஸிக் 6 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் ரூ.16,999 க்கும், இதன் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் ரூ.18,499 என்றும் மேலும் 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ.19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன், கோபால்ட் ப்ளூ மற்றும் ஷேடோ க்ரே நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற செப்டம்பர் 29 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் (நண்பகல்) ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here