நரேந்திர மோடி, வரலாற்றில் முதன்முறையாக செய்தவையாக தான் செய்ததாக கூறினாலும், அவற்றின் உண்மை நிலையை ஆராய்ந்தால் அவற்றில் பல பொய்யாகவே இருக்கும். நவம்பர் 25 ஆம் தேதி முதன்முதலாக உச்சநீதிமன்றத்திற்கு உள்ளே சென்றார். இந்த 60 வருட இந்திய வரலாற்றில் எந்த பிரதமரும் இவ்வாறு சென்றதில்லை. தற்போது இருக்கும் இந்த உச்சநீதிமன்ற வளாகம் 60 வருடங்களுக்கு முன்பு ஜவஹர்லால் நேருவால் துவக்கிவைக்கப்பட்டது .

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்த மோடி அவரிடம் நீதிமன்ற அறை 1-ஐ காட்டும்படி கூறியதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

அந்த அறையில்தான் அரசு சம்பந்தபட்ட முக்கிய வழக்குகளில் முறையான தீர்ப்பு கொடுக்கப்படும். இந்த முக்கியமான வழக்குகளில் சிபிஐ விசாரணைக் கோரி முன்னாள் பாஜக அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா,அருண் ஷோரி, மற்றும் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆகியோர் கொடுத்த மனுவும் , சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு கட்டாய விடுப்பு கொடுத்ததால் பதிவான வழக்கும் அடங்கும். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற விசாரணைக்கு பிறகு,ரஃபேல் சம்பந்தப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர் . கட்டாய விடுப்பு கொடுத்த சிபிஐ இயக்குநர் வழக்கு விசாரணையின் தீர்ப்பும் சீக்கிரமே வரவுள்ளது.

தலைமை நீதிபதி கோகாய் மோடியை விருந்துக்கு அழைத்தார். அந்த விருந்தில் பங்களாதேஷ் , பூட்டன், மியான்மர், நேபாளம் , தாய்லாந்து நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகள் கலந்துக் கொண்டனர்.

மோடி உச்சநீதிமன்ற வளாகத்துக்கு 8 மணியளவில் சென்றார். அவர் இரவு உணவின் போது நீதிபதிகள் பலரை சந்தித்ததாக கூறப்படுகிறது. இரவு 9.30 மணிக்கு இரவு உணவு விருந்து முடிந்தது. இருந்த பிறகும் மோடி கிளம்பவில்லை என்று தி வயர் ஊடகத்துக்கு வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போதுதான் மோடி தலைமை நீதிபதியிடம் நீதிமன்ற அறை 1-க்கு தன்னை அழைத்து போகும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அங்குதான் அரசுக்கு எதிரான வழக்குகளுக்காக அவரது நண்பரும், நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி உச்சநீதிமன்ற நீதிபதியாக வாதாடுவார் .

மோடி இவ்வாறு கேட்டவுடன் மோடியின் பாதுகாப்பு படையினர் பரபரப்பானார்கள் . இதனால் குழப்பமடைந்த கோகாய் மரியாதை நிமித்தமாக தன்னுடைய விருந்தினர்களிடம் மோடியை நீதிமன்ற அறைக்கு அழைத்து போவதாக கூறியுள்ளார்.

நீதிமன்ற அறைக்குள் சென்ற மோடி முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டார் . அவர் நீதிமன்ற அறை எண் 1 இன் மரபுகள் பற்றி கோகாயிடம் விசாரித்து தெரிந்துக் கொண்டார். பின் கோகாயுடன் காபி சாப்பிட்டுவிட்டு இரவு 10 மணிக்கு மேல் கிளம்பினார்.

குஜராத் முதலமைச்சராக இருந்தபோதும், பிரதமராக இருக்கும் போதும் அவர் சார்ந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்திற்கு வந்துள்ளன. தற்போதுகூட 2002 குஜராத் கலவரத்தில் மோடி குற்றமற்றவர் என்ற எஸ்ஐடி அறிக்கையை மறுஆய்வு செய்யும் மனுவை விசாரணைக்கு ஏற்றுள்ளது உச்ச நீதிமன்றம்.

Courtesy : The Wire