60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

0
242

சென்னை: தமிழகம் முழுவதும் 600 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.  சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது. கடந்த 10-ம் தேதி பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  ஜனவரி 31-ந் தேதிக்குள் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை  அன்று பூஸ்டர் டோஸ் போட சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 600 இடங்களில்  பூஸ்டர் டோஸ்  சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது


சென்னையில் 160 இடங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும், முகாம்களிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் 15 முதல் 18 வயதுடைய சிறார்களும் இந்த முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here