மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டு திட்டத்தை வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக முதற்கட்டமாக 6 மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு  அங்கு மாதிரி ரேஷன் அட்டை பின்பற்ற மத்திய அரசு மாநில அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.

‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நாடு முழுமைக்கும் பொருந்தும் வகையிலான பொதுவான வடிவமைப்பில் ரேஷன் அட்டைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மாநில அரசுகள் அதே வடிவமைப்பு பின்பற்றி புதிய ரேசன் கார்டுகளை மக்களுக்கு வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக முன்னோட்ட அடிப்படையில் ஆறு மாநிலங்களில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், 2020ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து பயனாளிகள் அனைவரும் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் (என்எஃப்எஸ்ஏ) கீழ் எந்த நியாய விலைக் கடைகளிலிருந்தும் தங்களது ரேஷன் காா்டைப் பயன்படுத்தி பொருள்களைப் பெறமுடியும்.

வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் என்எஃப்எஸ்ஏ-ன் கீழ் ரேசன் கார்டுகளை வழங்க புதிய வடிவத்தில் ரேசன் கார்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு உருவாக்கியுள்ள புதிய ரேசன் கார்டுக்கான வடிவமைப்பில் பயனாளர்களின் குறைந்தபட்ச தகவல்கள் இடம்பெற்றிருக்கும். ரேசன் கார்டு எண் 10 இலக்கங்களை கொண்டதாக இருக்கும். என்எஃப்எஸ்ஏ திட்டத்தின் கீழ் 81.35 கோடி பயனாளிகளை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், 75 கோடி பயனாளிகள் ஏற்கெனவே இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வழங்கப்பட்டுள்ள ரேஷன் கார்டில் பயனாளிகளின் தேவையான குறைந்தபட்ச விவரங்கள் இருக்கும் என்றும், தேவைப்பட்டால் மாநிலங்கள் அவற்றின் தேவைக்கேற்ப கூடுதல் விவரங்களைச் சேர்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மொழி பெயர்வுத் திறனுக்காக, ரேஷன் கார்டை இரு மொழி வடிவத்தில் வழங்க மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

இதில் உள்ளூர் மொழி தவிர, மற்ற மொழி இந்தி அல்லது ஆங்கிலமாக இருக்கலாம். 10 இலக்க நிலையான ரேஷன் கார்டு எண்ணில், முதல் இரண்டு இலக்கங்கள் மாநில குறியீடாகவும், அடுத்த இரண்டு இலக்கங்கள் ரேஷன் கார்டு எண்களை இயக்கும். இது தவிர, ரேஷன் கார்டில் வீட்டின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்துவமான உறுப்பினர் ஐடிகளை உருவாக்க ரேஷன் கார்டு எண்ணுடன் மேலும் இரண்டு இலக்கங்கள்  தொகுக்கப்பட்டுள்ளதாக மத்திய உணவு வழங்கல் துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here