2018ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 100 கோடி ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாக கெமல்டோ (Gemalto) என்ற சர்வதேச அளவிலான இணையப் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கெமல்டோ என்ற சர்வதேச இணையப் பாதுகாப்பு நிறுவனம், இணையத்தில் நடைபெறும் தகவல் கசிவு தொடர்பான விவரங்களைச் சேகரித்துவருகிறது. மேலும் இணையப் பாதுகாப்பு, தகவல் பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான சேவைகளையும் கெமல்டோ செய்து வருகிறது.

சமீபத்தில் கெமல்டோ ஆதார் தகவல்கள் கசிந்தது பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுமார் 100 கோடி பேரின் ஆதார் தகவல்கள் கசிந்துள்ளதாகக் கூறுகிறது. இவற்றில் தனிநபருடைய பெயர், முகவரி மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களும் அடங்கும். மேலும் இவ்வாற் கசிந்துள்ள தகவல்களில் 12இல் ஒரு தகவல் மட்டும்தான் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்று கெமல்டோ கூறியுள்ளது. அதாவது 12 முறை நடந்த ஹேக்கிங் முயற்சியில் ஒரு முறை திருடப்பட்ட விவரங்கள் மட்டும் தொழில்நுட்ப ரீதியாக என்க்ரிப்ட் செய்து பாதுகாக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக திருடப்பட்ட விவரங்களை யாரும் பார்க்க முடியாது. ஆனால் மற்ற 11 முறை திருடப்பட்ட விவரங்கள் அவ்வாறு பாதுகாக்கப்படவில்லை என கெமால்டோவின் அறிக்கை தெரிவிக்கிறது.

உலக அளவில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதத்தில் 945 தகவல் அத்துமீறல்கள் நடந்துள்ளதாகவும் அதன் மூலம் 450 கோடி தகவல்கள் கசிந்துள்ளதாகவும் கெமல்டோ கூறுகிறது. 2017ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் கசிந்த தகவல்களைக் காட்டிலும் இந்த ஆண்டு கசிந்த தகவல்கள் 133 சதவீதம் அதிகம் என்று கூறுகிறது கெமல்டோ அறிக்கை .

இந்த ஆதார் பதிவுகளை ஹேக் செய்து திருடும் முயற்சிகள் இதுவரை 12 முறை நடந்துள்ளன. அதன் மூலமாக சுமார் 100 கோடி மக்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் திருடப்பட்டன அல்லது கசிந்து விட்டது.

Courtesy : Business Line

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here