சர்கார் திரைப்படம் நவம்பர் 6 ஆம் தேதி தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் உலகம் எங்கும் வெளியாகிறது. ஆன்டார்டிகா தவிர்த்து மற்ற 6 கண்டங்களிலும் சர்கார் வெளியாவது தமிழ் திரைவரலாற்றின் சாதனையாகும்.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் சர்கார் தமிழகத்திலும், பிற இடங்களிலும் நம்ப முடியாத வியாபாரத்தை பெற்றுள்ளது. இந்தியாவுக்கு வெளியே வழக்கமான வெளியாகும் யுஎஸ், யுகே, அயர்லாந்த், கனடா, ஆஸ்ட்ரேலியா, நியூசிலாந்த், சிங்கப்பூர், மலேசியா தவிர்த்து போலந்த், மெக்சிகோ, தென்னாப்ரிகா, பிலிப்பைன்ஸ், உக்ரைன், ரஷ்யா, பிரான்ஸ் என பல நாடுகளில் வெளியாகிறது. அன்டார்டிகா தவிர்த்து அனைத்து கண்டங்களிலும் சர்கார் வெளியாகிறது என சர்காரின் வெளிநாட்டு உரிமை வாங்கியவர்கள் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளனர்.
உலக அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சர்கார் வெளியாகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்