போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆறாவது நாளாகத் தொடர்கிறது. இதனால் செவ்வாய்க்கிழமை (இன்று) தொடங்குவதாக இருந்த பொங்கல் சிறப்புப் பேருந்து முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடந்த வியாழக்கிழமை (ஜன.4) முதல், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் ஆறாவது நாளாக செவ்வாய்க்கிழமை (இன்றும்) தொடர்கிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்களுக்காக 11,983 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதற்கான முன்பதிவு ஜன.9 (இன்று) முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் ஆறாவது நாளாக நீடித்து வருவதால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்பு முன்பதிவு கவுண்டர்களை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை (இன்று) திறந்து வைப்பதாக இருந்த நிலையில் அந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: “கப்பல் படையில் மீனவர்களைச் சேருங்கள்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்