டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பிர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக டெல்லி அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடர் போட்டிகள் கடந்த ஏப்.7ஆம் தேதி தொடங்கியது. இத்தொடரில் மொத்தம் எட்டு அணிகள் விளையாடி வருகின்றன. மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ஸ் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், ஹைதராபாத் சன் ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் லெவன், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக கவுதம் காம்பிர் இருந்து வந்தார். இத்தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஐந்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி தோல்வியைச் சந்தித்துள்ளது.

iyer

இந்நிலையில், தோல்விகளுக்குப் பொறுப்பேற்று கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக இந்த அணியின் கேப்டன் கவுதம் காம்பிர் அறிவித்துள்ளார். இதனையடுத்து டெல்லி அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்