எஸ்சி, எஸ்டி சட்டத்தில் நீதிமன்றம் திருத்தம் செய்யப்பட்டதற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், தலித் மற்றும் பழங்குடியினர் அமைப்பு சார்பில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது . இப்போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலித் மக்களுக்கு எதிரான மனநிலை உடையவர் பிரதமர்மோடி. அதனால்தான், எஸ்,எஸ்டி வன்கொடுமை சட்டத்தை நீர்த்துப்போகச் செய்த நீதிபதிக்கு பதவி உயர்வு கொடுத்துள்ளார் என்று கூறினார்.

நரேந்திர மோடியை ராகுல் காந்தி விமர்சித்திருந்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வலுவான திருத்தங்களை செய்ய வேண்டும், ஒபிசி ஆணையத்தை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்டவையே பிரதமர் நரேந்திர மோடியின் மரபு. ஆனால் தலித்துகள் தலைவர்களை அவமதிப்பது, மண்டல் ஆணைய அறிக்கையை எதிர்ப்பது, ஒபிசி ஆணையத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது ஆகியவையே காங்கிரஸின் மரபு ஆகும்.

கண்களை சிமிட்டுவது, நாடாளுமன்றத்தில் இடையூறு செய்வது ஆகிய பணிகளைச் செய்யாமல் உண்மையான செய்திகளை பற்றி தெரிந்துக் கொள்ள குறிப்பிட்ட நேரத்தை செலவிடும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் அமித் ஷா பதில் கூறியிருந்தார்.

அமித் ஷா கூறியதற்கு பதிலடியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், பாஜக ஆளும் மாநிலங்களில் தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது என்று நான் கூறியதற்கு, 56 இன்ச் மார்பு கொண்டவருக்கு (மோடி) , நெருக்கமானவர் (அமித் ஷா) என்னிடம் உண்மையைப் பற்றி தெரிந்து கொள்ள கூறியிருந்தார்.

தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறை அதிகமாயிருக்கிறது என்பதற்கு உதாரணமாக ஒரு செய்தியை இணைத்துள்ளேன். நான் உண்மையை ஆராய்ந்த பிறகே அவ்வாறு கூறினேன் . இந்தச் செய்தி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் 56 இன்ச் மார்பு உடையவரையும் (மோடி), அவருக்கு நெருக்கமானவரையும் (அமித் ஷா) எழுப்பும். அல்லது நானும், காங்கிரஸ் கட்சியும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் உங்களை எழுப்புவோம் .

ராகுல் காந்தி இணைத்திருக்கும் இந்தியா டுடே வெளியிட்டிருக்கும் செய்தியின் சுருக்கம் - தேசிய குற்ற ஆவணப் பிரிவு 2016 ஆம் ஆண்டில் வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில் பாஜக ஆளும் மாநிலங்களில் தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடந்திருக்கிறது .உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார், மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகமாகியிருக்கிறது என்று தேசிய குற்ற ஆவணப் பிரிவு தகவல் தெரிவிக்கிறது .

2016 இல் உத்தர பிரதேசத்தில் பாஜக ஆளவில்லை, மேலும் ஆந்திர பிரதேசத்திலும் பாஜக ஆட்சி செய்யவில்லை. ஆனாலும் பாஜக ஆளும் ராஜஸ்தானில் 12.1 சதவீதமும், பீகாரில் 14 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 12.3 சதவீத குற்றங்களும் தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக பதிவாகியுள்ளது . நாடு முழுவதுமாக கணக்கிட்டால் இந்த 3 மாநிலங்களிலும் சேர்த்து தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் 38 சதவீதம் நடந்துள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 20 சதவீதம் தலித்துகள் இந்த 3 மாநிலங்களிலும் வாழ்கிறார்கள்.

லக்னோ(உத்தர பிரதேசம்) , பாட்னா (பீகார்), ஜெய்ப்பூர் (ராஜஸ்தான்) போன்ற நகரங்களில் தலித்துகளுக்கு எதிராக மிக அதிகமாக குற்றங்கள் நடக்கிறது என்று இந்த தேசிய குற்ற ஆவணப் பிரிவு தகவல் கூறுகிறது. தலித்துகளுக்கு எதிராக குற்றங்கள் நடக்கும் 19 நகரங்களில் 45 சதவீத குற்றங்கள் இந்த 3 நகரங்களிலும் நடக்கிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்