தமிழகத்தில் 555 புதிய பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் புதிதாக 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும் என கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஜூலையில் 515 பேருந்துகளும் அக்டோபரில் 471 பேருந்துகளும் தொடங்கி வைக்கப்பட்டன.

இந்நிலையில் மூன்றாவது கட்டமாக 401 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 555 பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதுவரை மூன்று கட்டங்களாக 1540 பேருந்துகளின் சேவைகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here