90சிசி முதல் 125சிசி வரையில் இருக்ககூடிய ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அதிகபட்சம் 50,000 ரூபாயிலிருந்து 55,000 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்து விற்கப்படுகின்றன.

ஸ்கூட்டர் வாங்கவேண்டும் என்ற நோக்கில் உள்ளவர்களுக்கு இந்தியாவில் திறன், செயல்பாடு மற்றும் விற்பனை ஆகியவற்றில் சிறந்த ஸ்கூட்டர்கள் பற்றிய ஆலோசனைகளை இந்த பதிவு சிறந்த முறையிலாக வழங்கும்.

Honda_Dio_360_4

1. ஹோண்டா டியோ( HONDA DIO )

ஹோண்டா நிறுவனத்தின் ஸ்கூட்டர்களில் பெரிய டிரெண்ட் செட்டர் என்றால் அது டியோ( HONDA DIO ) தான். வேகம், திறன் ஆகியவை இதனுடைய தனித்துவமான அடையாளம்.

மேலும் ஹோண்டா ஆக்டிவா, டியோ ஸ்கூட்டர்களுக்கு இடையே அவற்றின் தோற்றத்தை வைத்தே வேறுபாடு கொண்டு உருவாக்கி ஆக்டிவா மற்றும் டியோ விற்பனையில் எந்தவிதமான ஏற்ற இறக்கமின்றி, சரியான விகிதத்தில் விற்பனை
செய்து வருகிறது ஹோண்டா நிறுவனம்

ஸ்போர்ட்டிவான கிராபிக்ஸ், டிரெண்டிங்க் அடிக்கும் டூயல்-டோன் நிறங்கள், எப்போதும் இளமையான தோற்றம் ஆகியவை டியோவின் சிறப்பம்சங்கள். 110சிசி திறன் கொண்ட இதன் எஞ்சின் ஆக்டிவா ஐ மற்றும் 4ஜி மாடல்கள் அளிக்கும் செயல்திறனையே தரும்.

ஹோண்டா டியோ( HONDA DIO ) ஸ்கூட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 60 கிலோ மீட்டர் மைலேஜ் தரும்.

பல முறை ஹோண்டா நிறுவனம் டியோ ஸ்கூட்டரை மேம்படுத்தியும் இதனுடைய விற்பனையில் எந்த இறக்கமும் ஏற்பட்டு விடவில்லை. தோற்றம், செயல்திறன் அனைத்திலும் ஆக்டிவாவை வைத்து வடிவமைக்கப்பட்ட ஹோண்டா டியோ( HONDA DIO ) ஸ்கூட்டரின் விலை :
₹ 52704/-

Hero-Maestro-Edge-Blue

2. ஹீரோ மேஸ்ட்ரோ ( Hero Maestro )

மேஸ்ட்ரோ( Maestro )ஸ்கூட்டர் ப்ரீமியம் மாடல் தரத்தில் ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் தயாரித்துள்ள மாடல்.

ஆஸ்டிரியா நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் இதற்கான எஞ்சினை ஹீரோ நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ளது. சிங்கிள் சிலிண்டர் ஆர்-கூல் முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இதனுடைய எஞ்சின் 8 பி.எச்.பி பவர் மற்றும் 87 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

மேஸ்ட்ரோ( Maestro ) ஸ்கூட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 64 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சிவிடி டிரான்ஸ்மிஷன் கியர் தொழில்நுட்பம் கொண்ட இந்த ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை :

DRUM BRAKE ALLOY WHEEL – ₹ 53,300/-
DRUM BRAKE ALLOY WHEEL – DUAL TONE COLOR – ₹ 53,300/-

wego-home-1

3. டி.வி.எஸ் விகோ ( TVS Wego )

டிவிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் சிங்கிள் சிலிண்டர் 109.77சிசி எஞ்சின் திறன் கொண்ட ஸ்கூட்டர் டிவிஎஸ் விகோ( TVS Wego ).

இந்த ஸ்கூட்டரின் எஞ்சின் 8 பி.எச்.பி பவர் மற்றும் 8 என்.எம் டார்க் திறனை வழங்கும். மேலும் இதில் ஆட்டோமேட் டிரான்ஸ்மிஷன் கொண்ட கியர்பாக்ஸ் உள்ளது.

டி.வி.எஸ் விகோ( TVS Wego ) ஸ்கூட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 62 கிலோ மீட்டர் மைலேஜ் தரும்.

தொலைதூர பயணங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படும் விதத்தில் டிவிஎஸ் நிறுவனம் டி.வி.எஸ் விகோ( TVS Wego )வைத் தயாரித்துள்ளது. இந்தியாவில் இதனுடைய விலை : ₹ 53009/-

lets-dynamic-blue-20-

4. சுசுகி லெட்ஸ் ( Suzuki Lets )

சுசுகி நிறுவனத்தின் லெட்ஸ் ( Suzuki Lets ) ஸ்கூட்டர் அதனுடைய செயல்பாடு மற்றும் திறனுக்கு பெயர் பெற்றது.

சிங்கிள் சிலிண்டர், ஃபோர் ஸ்ட்ரோக் எஞ்சின் கொண்ட லெட்ஸ் ஸ்கூட்டர் 8.4 பி.எச்.பி பவர் மற்றும் 8.8 என்.எம் டார்க் திறனை தர வல்லது. பெரும்பாலான மாடல்களை போல இதிலும் டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் உள்ளது. லெட்ஸ் ஸ்கூட்டர் 10 அகல அளவில் டியூப் லெஸ் சக்கரங்களால் இயங்கும்.

சுசுகி லெட்ஸ் ( Suzuki Lets ) ஸ்கூட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 63 கிலோ மீட்டர் மைலேஜ் தரும்.

மோனோ டோன் மற்றும் டூயல் டோன் என இரண்டு வேறு வண்ண தோற்றங்களில் வெளிவருகிறது. சுசுசி லெட்ஸ் ஸ்கூட்டரின் விலை :
₹ 52,094/-

matte-purple-min

5. டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் (TVS Scooty Zest 110 )

டிவிஎஸ் நிறுவனத்தின் மற்றொரு பிரபலமான ஸ்கூட்டர் டி.வி.எஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட்.

ஸ்கூட்டியை மறக்கக்கூடாது என்பதற்காகவே டிவிஎஸ் இந்த மாடலுக்கு இவ்வாறு பெயர் வைத்துள்ளது.

110சிசி சிங்கிள் சிலிண்டரில் தயாரான இதனுடைய எஞ்சின் 8 பி.எச்.பி பவர் மற்றும் 8.7 என்.எம் டார்க் திறனை வழங்கும். டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன், டியூப் லெஸ் டயர்ஸ் என தற்போதைய காலத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் உள்ளன.

டி.வி.எஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 62 கிலோ மீட்டர் மைலேஜ் தரும்.

மேலும் பெண்களின் தேவைக்காக அதிகமான உடமைகளை வைத்துக்கொள்ளக் கூடிய கொக்கிகள் இருக்கையின் வசதிக்கேற்ப இதில் உள்ளன. 98.5 கிலோ கிராம் எடைக்கொண்ட டிவிஎஸ் ஜெஸ்ட் ஸ்கூட்டர் விலை :

SCOOTY ZEST MATTE SERIES : ₹ 51592/-
SCOOTY ZEST HIMALAYAN HIGHS SERIES : ₹ 50092/-

rayz-3qtr

6. யமஹா ரே இசட்( YAMAHA RAY Z )

ஆண்களுக்காவே Only for men என்ற அடையாளத்தோடு யமஹா நிறுவனம் வெளியிட்ட ஸ்கூட்டர் தான் ‘ரே இசட்’.

கருப்பு நிறத்தை ரெட் மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களோடு கலந்து ஒரு ஃப்யூஷன் தோற்றத்தில் இருக்கும் இந்த ஸ்கூட்டரின் விற்பனை தற்போது ஏறுமுகத்தில் உள்ளது.

2 வால்வ் 4 ஸ்டோர்க் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள யமஹா ரே இசட் ஸ்கூட்டர் 7 பி.எச்.பி பவர் மற்றும் 8.1 டார்க் திறனை வழங்கும். ஒரு கிலோ மீட்டருக்கு 53 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் என யமஹா ரே இசட் ஸ்கூட்டரை பற்றி தெரிவிக்கிறது.

ஆண்களுக்கான ஸ்கூட்டர் என்று ரே இசட் மாடலை யமஹா அறிமுகப்படுத்திவிட்டதால். ஒரே மாடலில் மட்டுமே இது வெளிவருகிறது. யமஹா நிறுவனத்திற்கே உரித்தான துடிப்புடன் உள்ள யமஹா ரே இசட் ஸ்கூட்டரின் ஆன்ரோடு RAY Z விலை : ₹ 51,919*/-

20

7. டிவிஎஸ் ஜூபிட்டர் ( TVS Jupiter )

செயல்திறன், தோற்றம், ஸ்டைல் போன்ற சிறப்பம்சங்களில் ஜூப்பிட்டரின் விற்பனை இந்தியாவில் இமாலய அளவை எட்டியுள்ளது. டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டரின் எஞ்சின் 8 பி.எச்.பி பவர் மற்றும் 8 என்.எம் டார்க் திறனை வழங்கும். மேலும் இதில் டூயல் லாக் அமைப்பு உள்ளது திறமையான எஞ்சின், சிறந்த சவாரி தரமான மற்றும் எளிமையாக கையாளக்கூடிய திறன் இதில் பல கவனித்தக்க அம்சங்கள் உள்ளன.

டிவிஎஸ் ஜூபிட்டர் ( TVS Jupiter ) ஸ்கூட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 60 கிலோ மீட்டர் மைலேஜ் தரும்.

110சிசி திறனில் அறிமுகமான ஜூபிட்டர் ஸ்கூட்டர் வாகன உலகில் டிவிஎஸ் நிறுவனத்தின் பெருமை மிகு அடையாளமாக மட்டுமன்றி இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு அடுத்தப்படியாக அதிக விற்பனை பெற்று வரும் டிவிஎஸ் ஜூபிட்டரின் ஆன்ரோடு விலை TVS Jupiter –
₹ 54387*/-

web-honda-activa-4g

8. ஹோண்டா ஆக்டிவா ஐ( HONDA ACTIVA I )

இந்தியாவில் ஸ்கூட்டர் விற்பனையில் சாதனையை உருவாக்கிய மாடல் ஹோண்டா ஆக்டிவாதான், ஸ்கூட்டர்களின் அரசன் என்று சொல்லும் அளவிற்கு 15 வருடங்களுக்கும் மேலாக இந்திய சாலைகளில் பயணித்து வருகிறது .

சமீபத்தில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் யூனிசெக்ஸ் மாடலாக ஆக்டிவா ஐ ஸ்கூட்டரை ஹோண்டா அறிமுகப்படுத்தியது.

ஹோண்டா ஆக்டிவா ஐ( HONDA ACTIVA I ) ஸ்கூட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 65 கிலோ மீட்டர் மைலேஜ் தரும்.

110சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் இந்த மாடல் 8 பி.எச்.பி பவர் மற்றும் 9 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

தற்போது வெளிவந்துள்ள இந்த ஆக்டிவா ஐ ஸ்கூட்டரின் மாடல் உலோகத்தால் ஆனது. 103கிலோ கிராம் எடையில் பல நிறங்களில் தேர்வு செய்ய ஏதுவாக ஹோண்டா உருவாகியிருக்கும் மேம்படுத்தப்பட்ட ஆக்டிவா ஐ ஸ்கூட்டரின் விலை : ₹ 51986/-

UZO-red

9. மஹிந்திரா ரோடியோ உசோ ( Mahindra Rodeo UZO )

நான்கு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் பெருமளவில் ஈடுபட்டு வரும் மஹிந்திரா, இருசக்கர வாகன மார்க்கெட் மீது கவனம் செலுத்தியதன் விளைவாக உருவானது தான் மஹிந்திரா ரோடியா ஊசோ.

125சிசி திறன் கொண்ட இந்த ஸ்கூட்டர் ஆர்-கூலிங்க் தொழில்நுட்பம் கொண்ட இதன் எஞ்சின் ஃபோர் ஸ்ட்ரோக் முறையில் செயல்படும்.

மஹிந்திரா ரோடியோ உசோ ( Mahindra Rodeo UZO ) ஸ்கூட்டர் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 59 கிலோ மீட்டர் மைலேஜ் தரும்.

மஹிந்திரா ரோடியோ ஊசோவின் எஞ்சின் மூலம் 8 பி.எச்.பி பவர் மற்றும் 9 என்.ம் டார்க் திறன் கிடைக்கும். நெடுஞ்சாலைகளின் மூலம் 60 கிலோ மீட்டரும், நகரப் பகுதிகளில் 45 கிலோ மீட்டர் மைலேஜ் ரேடியோ ஊசோ ஸ்கூட்டர் மூலம் கிடைக்கும் என மஹிந்திரா தெரிவிக்கிறது. 7 விதமான வண்னங்களில் தயாரிக்கப்படும் மஹிந்திரா ரோடியோ ஆர்.இசட் ஸ்கூட்டரின் ஆன் ரோடு விலை : ₹ 48,200/-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here