அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள 51அடுக்குமாடி கட்டடத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஒரு ஹெலிகாப்டர் மோதி விபத்திற்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் விமானி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
மேகோர்மேக் என்வர் நியூயார்க் நகரில்உள்ள மான்ஹாட்டனில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரை இயக்கினார். ஹெலிகாப்டர் பறக்கத் தொடங்கிய 11 நிமிடத்தில், மழை மற்றும் கடும்பனிப் பொழிவின் காரணமாகஅவசரமாக தரையிரக்கப்பட்ட போது 51 அடுக்குமாடி கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில்ஹெலிகாப்டரை ஓட்டிவந்த விமானி மேகோர்க் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார்.  கட்டத்திற்குள் இருந்த ஒருவர் படுகாயமடைந்தார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த போலீஸார், தீயணைப்புபடையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அமெரிக்க அதிபர் டிரம்ப்  இந்தவிபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார். 

நியூயார்க் ஆளுநர்ஆண்ட்ரூ குவாமோ இந்த விபத்துக் குறித்து பேசியபோது, இந்த விபத்துமோசமான வானிலை காரணமாகவே நடத்துள்ளதாகவும், இதில் பயங்கரவாத நோக்கம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. எனினும்விபத்து குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

அடுக்குமாடி கட்டடத்தின் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்தாகி உள்ளது தெரியாமல், இரட்டைகோபுர தாக்குதல் போல்மற்றொரு தாக்குதலா என நியூயார்க் மக்கள்அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here