500 கோடியில் ராமாயண கதை…. சீதையாக நயன்தாரா?

0
503
Nayantara

பாகுபலி படத்தின் வெற்றி தயாரிப்பார்களை பிரமாண்டமாகவும், புராணரீதியாகவும் யோசிக்க வைத்திருக்கிறது. ஆளாளுக்கு 500, 1000 கோடிகளில் படம் செய்ய கிளம்பியிருக்கிறார்கள்.

இந்தியில் பாகுபலி போலவே ஒரு சீரியலை தயாரித்து வருகிறார்கள். கார்த்திகா தேவசேனாவாக நடிக்கும் இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. மலையாள விளம்பரப்பட இயக்குனர் அரபு தேசத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் தயாரிப்பில் மகாபாரதத்தை படமாக்க உள்ளார். மோகன்லால் பீமனாக நடிக்கும் இந்தப் படத்தின் பட்ஜெட் ஆயிரம் கோடிகள்.

தெலுங்குப்பட தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் 500 கோடியில் ராமாயணத்தை படமாக்கவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. புராண கதைகள் எனும்போது இந்தியர்களுக்கு அவைபற்றி விளக்க வேண்டியதில்லை. சாகஸக் காட்சிகள் அமோகம். அனுமார் சஞ்சீவி மலையை பெயர்த்துக் கொண்டு பறந்தால் ஏன் என்று எந்த விமர்சகர்களும் கேள்வி கேட்க மாட்டார்கள். இந்த வசதிகள் இருப்பதால் மகாபாரதம், ராமாயணத்தை மொய்க்கிறார்கள்.

அல்லு அரவிந்தின் படத்தில் நயன்தாரா சீதையாக நடிக்கலாம் என்று இப்போதே ஜோசியம் கூறுகிறார்கள். ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்த முன்அனுபவம் நயன்தாராவுக்கு இருக்கிறது. அதைவைத்து இப்படியொரு முன்தீர்மானம்.

தொலைக்காட்சிகள் சோட்டாபீம், அனுமார், கிருஷ்ணலீலை என்று பக்தி பரவசத்துடன் இருப்பது போல் இந்திய சினிமாவும் மாறப் போகிறதோ?

இதையும் படியுங்கள் : வனமகன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கிய ஸீ தமிழ் தொலைக்காட்சி

இதையும் படியுங்கள் :கேரளா: ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் படுகொலை

இதையும் படியுங்கள் :8 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை 250 கோடி ரூபாய் உடனடியாக வழங்கப்படும்

இதையும் படியுங்கள் :பதினெட்டாவது அட்சக்கோடு : வன்முறைகளும் மனித மாண்புகளும் விலகும் புள்ளி..

இதையும் படியுங்கள் :குடி நல்ல அனுபவமுமாகலாம்; அழிவுக்கும் காரணமாகலாம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்