50 சதவிகிதம் அதிகரித்த விற்பனை : அமேசான், ப்ளிப்கார்ட் தகவல்

0
216

அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் நிறுவனங்கள் தமது பண்டிகைக் கால சிறப்புத் தள்ளுபடி விற்பனை கடந்த 29ஆம் தேதி ஆரம்பித்தன. இந்நிலையில், நேற்று(வெள்ளிக்கிழமை) முடிந்த தள்ளுபடி விற்பனையில், கடந்த ஆண்டின் சிறப்பு விற்பனையைவிட 50 சதவிகிதம் அதிகமான விற்பனை இருந்தாக அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் நிறுவனங்கள் தெரிவித்திர்ருக்கின்றன. 

அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், #GreatIndianFestival என்ற பெயரிலும், ப்ளிப்கார்ட் நிறுவனம் #TheBigBillionDays என்ற பெயரிலும் கடந்த சனிக்கிழமை முதல் இந்தியாவில் 6 நாள்கள் பண்டிகைக்கால விற்பனையை ஆரம்பித்தன. இதில் மொபைல்போன், ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பல கோடி பெறுமதியான வீட்டு உபயோகப் பொருட்கள் சிறப்புத் தள்ளுபடி விற்பனை செய்யப்பட்டது. இம்முறை விற்பனை வழக்கமான விற்பனை காலத்தைவிட 10 மடங்கு அதிகரித்ததாக அமேசான் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டைக் காட்டிலும் இப்போது சிறுநகரங்கள், கிராமப்புறங்களில் இருந்து ஆர்டர்கள் 40 சதவிகிதம் அதிகரித்ததாக அமேசான் தெரிவித்துள்ளது. ப்ளிப்கார்ட் மூலம் தங்கள் பொருட்களை விற்ற வர்த்தகர்கள் எண்ணிக்கை 50 சதவிகிதம் உயர்ந்ததாகவும், ஆடை, அலங்காரப்பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் அதிக அளவில் வாங்கியதாகவும் ப்ளிப்கார்ட் தலைமை அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.