குறைந்த விலையில் தரமான, சொகுசான கார்களை 5 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் வாங்க முடியும்.

1)ரெனால்டு க்விட்
renaultkwid01

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெனால்டு நிறுவனத்தின் கார் க்விட்தான். இது எஸ்யூவி கார் . இதன் அடிப்படை வேரியண்ட் 0.8 லிட்டர் மேனுவல் மாடல் . இந்த காரின் விலை 2.67 லட்ச ரூபாய். டாப் வேரியண்ட்டான 1.0 லிட்டர் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (ஏஎம்டி) மாடல் 4.60 லட்ச ரூபாய்.

KWID_SIDE_CUT_SHOT_V-5_307214062017.jpg.ximg.l_full_m.smart

ரெனால்டு க்விட் காரில் மொத்தம் 20 வேரியண்டுகள் உள்ளன. டாப் வேரியண்ட்டான க்விட் கிளம்பர் ஏஎம்டி, 5,500 ஆர்பிஎம்மில் 67 பிஎஸ், 4,250 ஆர்பிஎம்மில் 91 என்எம் டார்க் திறனை உருவாக்கும். இந்த கார் ஒரு லிட்டருக்கு 24 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடியது.

ரெனால்டு க்விட் காரில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 7 இன்ச் டச் ஸ்க்ரீன், மீடியா என்ஏவி இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ப்ளூடூத் ஆடியோ ஸ்ட்ரீமிங் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் கிரவுண்ட் க்ளியரன்ஸ் 180 எம்எம்.

2) மாருதி சுசூகி இக்னிஸ்

galleryEx03

மாருதி சுசூகி இக்னிஸ் பார்ப்பதற்கு, மினி க்ராஸ்ஓவர் போல் காட்சியளிக்கும். ஸ்விப்ட், டிசையர் மாடல்களில் வரும் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடூ மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட இக்னிஸ், 6,000 ஆர்பிஎம்மில் 81 பிஎஸ், 4,200 ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

மாருதி சுசூகி இக்னிஸ், ஒரு லிட்டருக்கு 20.89 கிலோ மீட்டர் மைலேஜ் தரும். இந்த காரில், மேனுவல் ஏர் கண்டிஷனர், சென்ட்ரல் லாக்கிங், ப்ரண்ட் பவர் விண்டோஸ், ஆன்டி த்தெப்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

IGNIS-Dashboard-SHOT-e1484140667772
பயணிகளின் பாதுகாப்பிற்காக, காரின் முன்பகுதியில் 2 ஏர் பேக்குகள், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்), எலக்ட்ரானிக் ப்ரேக் போர்ஸ் டிஸ்டிரிபியூஷன் (இபிடி) உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஆரம்ப விலை 4.66 லட்ச ரூபாய்.

3) மாருதி சுசூகி ஸ்விப்ட்
maruti-suzuki-swift-front

இந்தியாவில் ஹேட்ச்பேக் கார் என்றால், அது மாருதி சுசூகி ஸ்விப்ட்தான். இதன் அடிப்படை எல்எக்ஸ்ஐ வேரியண்ட்டை மட்டும் 5 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் வாங்கலாம். இதில், ஏபிஎஸ், இபிடி, டிரைவர் மற்றும் பயணிகளுக்கான ஏர் பேக்குகள், ஆன்டி த்தெப்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

Maruti-Swift-2018-interior

மாருதி சுசூகி ஸ்விப்ட் காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 82 பிஎஸ், 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இதன் ஆரம்ப விலை 4.99 லட்ச ரூபாய்.

4) மாருதி செலிரியோ/ செலிரியோ எக்ஸ்
celerio1

செலிரியோ கார் 12 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில், ஏறத்தாழ 6 வேரியண்ட்கள் 5 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்கு உள்ளேதான் வருகின்றன. அடிப்படை வேரியண்ட்டான 1.2 லிட்டர் மேனுவல் பெட்ரோலின் விலை 4.20 லட்ச ரூபாய். செலிரியோ விஎக்ஸ்ஐ ஏஎம்டி 4.96 லட்ச ரூபாய்க்கும், எம்டி பெட்ரோல் 4.78 லட்ச ரூபாய்க்கும் கிடைக்கிறது.

ப்ளூடூத் உடனான ஆடியோ சிஸ்டம், ஏயூஎக்ஸ்-ஐஎன் மற்றும் யுஎஸ்பி கனெக்டிவிட்டி, டிரைவர் சீட்டிற்கு ஏர்பேக் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் கிரவுண்ட் க்ளியரன்ஸ் 165 எம்எம்.
celerio-front-dashboard_36761051114_o
ஹேட்ச்பேக் காரான இதில், கே10பி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 67 பிஎஸ் மற்றும் 90 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஒரு லிட்டருக்கு 23 கிலோ மீட்டர் மைலேஜ் தரும். டாப் ஸ்பீடு மணிக்கு 150 கிலோ மீட்டர்.
CelerioX
செலிரியோ எக்ஸ் காரானது, க்ராஸ்ஓவர் வெர்ஷன் ஆகும். ப்ளாக் அலாய் வீல்கள், ஆட்டோ கியர் ஷிப்ட், முன் பகுதியில் இரண்டு ஏர் பேக்குகள், ரூப் ரெய்ல்ஸ், பின் பக்க ஸ்பாய்லர் உள்ளிட்ட கூடுதல் வசதிகளுடன் வரும் இந்த காரின் விலை 4.62 லட்ச ரூபாய்.

5) மாருதி சுசூகி வேகனார்
217af63e77cd76de01d4ede1989fc3fa__1
5 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனை வேகனார் வழங்குகிறது.

அடிப்படை வேரியண்டில் பொருத்தப்பட்டுள்ள எல்எக்ஸ்ஐ 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 67 பிஎஸ், 90 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இது 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்.
Maruti_Suzuki_Wagon_R_Stingray_5_wyruz
வேகனார் ஏஎம்டியும் இதே வசதிகளுடன்தான் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை 4.88 லட்ச ரூபாய். ட்யூயல் டோன் இன்டீரியர், அலாய் வீல்கள், கியர் ஷிப்ட் இன்டிகேட்டர், ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. வேகனார் காரின் ஆரம்ப விலை 4.15 லட்சம்
மட்டுமே.

6) ஹுண்டாய் கிராண்ட் ஐ10
Hyundai_Grand_i10_Official_Wallpaper_7
ஸ்போர்ட் லுக் தரக்கூடிய, ஹுண்டாய் கிராண்ட் ஐ10 காரின் ஆரம்ப விலை 4.7 லட்சம் மட்டுமே. பவர் ஸ்டியரிங், ஃப்ரண்ட் பவர் விண்டோஸ், டிரைவர் சீட்டிற்கு ஏர்பேக், ஆன்டி த்தெப்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
Hyundaigrand_i10_instrument
இதன் 1.2 லிட்டர் கப்பா விடிவிடி பெட்ரோல் இன்ஜின், 6,000 ஆர்பிஎம்மில் 82 பிஎஸ், 4,000 ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க் திறனை உருவாக்கும். இந்த கார் ஒரு லிட்டருக்கு 18.9 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடியது.

7) டட்சன் ரெடி கோ
Datsun-Redi-Go-Sport
பட்ஜெட் ப்ரெண்ட்லியான காராக டட்சன் ரெடி கோ பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படை வேரியண்ட், 799 சிசி ஐ-சேட் பெட்ரோல் இன்ஜினுடன் விற்பனைக்கு வருகிறது. 5 ஸ்பீடு மேனுவல் காரான இதன் ஆரம்ப விலை 2.50 லட்சம் மட்டுமே.

டட்சன் ரெடி கோ காரின் டாப் வேரியண்ட், 1.01 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் விற்பனைக்கு வருகிறது. 5 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் காரான இதன் விலை 4.06 லட்சம். லிட்டருக்கு 22 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும்.
Datsun-redi-GO-Interiors (1)
பவர் ஸ்டீயரிங், டிஆர்எல்எஸ் (பகல் நேரத்திலும் எரியும் விளக்குகள்), ஏசி, ப்ரண்ட் பவர் விண்டோஸ், டேக்கோ மீட்டர், ட்யூயல் டிரிப் மீட்டர், டிரைவர் சீட்டிற்கான ஏர்பேக் உள்ளிட்ட வசதிகள் இந்த காரில்

8)மாருதி சுசூகி ஆல்டோ 800/ கே 10
2015-Maruti-Alto-K10-front-quarter-press-shot
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பட்ஜெட் கார் ஆல்டோ 800தான். இதன் அடிப்படையான பெட்ரோல் மாடலின் விலை 2.51 லட்சம்தான். இந்த காரின் எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி வேரியண்ட்டின் விலை 3.78 லட்சம்.

ஆல்டோ 800 காரில் பொருத்தப்பட்டுள்ள 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடனான எப்8 டி பெட்ரோல் இன்ஜின், 47 பிஎஸ், 69 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

அதே நேரத்தில் இதன் சிஎன்ஜி வேரியண்ட், 40 பிஎஸ், 60 என்எம் டார்க் திறனை உருவாக்கும். டாப் வேரியண்ட்டான விஎக்ஸ்ஐ (ஓ) காரில், பவர் ஸ்டியரிங், ரிமோட் ட்ரங்க் ஓபனர், ஏசி, ஃப்ரண்ட் பவர் விண்டோஸ், டியூயல் டிரிப் மீட்டர், டிரைவர் சீட்டிற்கு ஏர் பேக் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
Urbano4
அதிக சக்தி வாய்ந்த கே10 காரில் பொருத்தப்பட்டுள்ள கே சீரீஸ் இன்ஜின் 20 பிஎஸ் மற்றும் 21 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த காரில், இரண்டு ஸ்பீக்கர்கள் உடனான ஆடியோ என்டர்டெயின்மெண்ட் சிஸ்டம், கியர் ஷிப்ட் இன்டிகேட்டர் உள்ளிட்ட கூடுதல் வசதிகளும் உள்ளன.

9) மகேந்திரா கேயூவி 100 என்எக்ஸ்டி
39069_mahindrakuv100_1
மலிவான விலையில் மார்க்கெட்டில் கிடைக்க கூடிய கச்சிதமான எஸ்யூவி கார்களில் மகேந்திரா கேயூவி 100 என்எக்ஸ்டி காரும் ஒன்று. ட்யூயல் டோன் எக்ஸ்டீரியர்கள், க்ளியர் லென்ஸ் டெயில் லேம்ப்கள், இந்த காருக்கு மேலும் அழகூட்டுகின்றன.

இந்த காரின் அடிப்படை வேரியண்ட் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் விற்பனைக்கு வருகிறது. இது 82 பிஎஸ், 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.
39077_mahindrakuv100_6
5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் காரான இது, ஒரு லிட்டருக்கு 18 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடியது. இதில், இபிஎஸ், இபிடி உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் உள்ளன. இதன் ஆரம்ப விலை 4.5 லட்ச ரூபாய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here