சட்டீஸ்கரில் இரண்டு கட்ட தேர்தல்களாக நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20 ஆம் தேதிகளில் நடக்க இருக்கிறது . சட்டீஸ்கரில் நவம்பர் 12 ஆம் தேதி 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் , நவம்பர் 20 ஆம் தேதி 72 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

மத்திய பிரதேசத்திலும், மிசோரத்திலும் நவம்பர் 28 ஆம் தேதி தேர்தல் நடை பெற இருக்கிறது. ராஜஸ்தான் மற்றும் தெலங்கானாவில் ஒரே கட்டமாக டிசம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடை பெற இருக்கிறது.

3 மக்களவை தொகுதிகளுக்கும், 2 சட்டபேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி நடை பெற இருக்கிறது.

5 மாநிலங்களுக்கும் வாக்குகளை எண்ணும் பணி டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெறும்

4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது. திருப்பரங்குன்றம், திருவாரூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கபடவில்லை.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் 2018, டிசம்பர் மாதம் 15 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அந்த மாநிலங்களுக்கு புதிதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

மிசோரமில் 50 சட்டசபை உறுப்பினர்களின் பதவிக்காலம் டிசம்பர் 15, 2018 இல் முடிவடைகிறது . சட்டீஸ்கர் மாநிலத்தில் 90 சட்டசபை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜனவரி 5, 2019 இல் முடிவடைகிறது. மத்திய பிரதேசத்தில் 230 சட்டசபை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜனவரி 7, 2019 இல் முடிவடைகிறது. ராஜஸ்தானில் 200 சட்டசபை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜனவரி 20, 2019 இல் முடிவடைகிறது.

மிசோரமில் 2008 ஆம் ஆண்டிலிருந்து ஆட்சியில் இருக்கிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது.

ராஜஸ்தானில் பாஜக 160 இடங்களைப் பெற்று வசுந்தரா ராஜே முதல்வராக இருக்கிறார். மத்திய பிரதேசத்தில் பாஜக 166 இடங்களைப் பெற்று சிவ்ராஜ் சௌகான் முதல்வராக இருக்கிறார் . சட்டீஸ்கரில் 49 இடங்ளைப் பெற்று ராமன் சிங் முதல்வராக இருக்கிறார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்