5 நிமிடங்கள் தாமதம்: மாணவிக்கு நீட் தேர்வு எழுத அனுமதி மறுப்பு

0
328

திருப்புவனத்தில் நீட்தேர்வு எழுத 5 நிமிடம் தாமதமாக வந்த மாணவி தேர்வு எழுத அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டார்.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை இந்தியா முழுவதும் 3,842 மையங்களில் 15 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் எழுதினார்கள். தமிழ்நாட்டில் 14 நகரங்களில் 238 தேர்வு மையங்களில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 900-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதினர். 

இந்நிலையில் நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது. திட்டமிட்டபடி இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. 

சிவகங்கை மாவட்டம்  லாடனேந்தால் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் 480 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத பதிவு செய்த நிலையில் 393 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்தனர்.

இந்நிலையில் மானாமதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் 1.35 மணிக்கு தேர்வு மையத்திற்கு வந்தார். 5 நிமிடங்கள் தாமதமாக  வந்த அந்த மாணவியை தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. நீட் தேர்வு 2 மணிக்கு ஆரம்பித்தாலும் மாணவர்கள் தேர்வு மையத்தினுள் அரைமணி நேரத்திற்கு முன் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால் 5 நிமிடங்களே தாமதமாக வந்துள்ளதால் தன்னை அனுமதிக்க வேண்டுமென நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும், தேர்வு எழுத அனுமதி கிடைக்காததால் வேறு வழியின்றி அந்த மாணவி வீட்டிற்கு திரும்பி சென்றார்.

முன்னதாக கடும் சோதனைகளுக்கு பின்னர் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஒரு மாணவர்க்கு ஆதார் ஒரிஜினல் இல்லமால் வந்ததால் பல்வேறு விசாரணை பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டர். 100அடியில் இருந்தே மாணவர்கள் நடந்து வந்து அவர்கள் கொண்டு வந்த ஆவணங்கள் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here