அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா, பரோல் நாட்கள் முடிவடைந்ததை அடுத்து, மீண்டும் சிறைக்குப் புறப்பட்டார்.

சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, அவரது உறவினர்கள், இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

இந்நிலையில், சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

sasikala

இதனால், அவரைச் சந்திப்பதற்காக, தனக்கு 15 நாள்கள் பரோல் வழங்கும்படி சிறைக் காண்காணிப்பாளரிடம் சசிகலா மனு தாக்கல் செய்திருந்தார். அதனைப் பரிசீலித்த சிறை நிர்வாகம், கடந்த வெள்ளிக்கிழமைசசிகலாவுக்கு கடும் நிபந்தனைகளுடன் ஐந்து நாட்கள் (அக்.6 முதல் அக்.11 வரை) பரோல் வழங்கியது.

இதனையடுத்து பரோலில் வெளியே வந்த அவர், சென்னை தி.நகரில் உறவினரின் வீட்டில் தங்கினார். நாள்தோறும் கணவர் நடராஜனைக் காண மருத்துவமனைக்கு சென்று வந்தார். இந்நிலையில் அவரின் பரோல் நாட்கள் முடிவடைந்ததை அடுத்து, அவர் மீண்டும் பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறைக்குப் புறப்பட்டார்.

இதையும் படியுங்கள்: ஒத்தையா ரெட்டையாங்கிறதை படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க… ரகசியத்தை உடைக்காத அட்லி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்