அம்மாடியோவ்! ஐந்து கேமராக்களுடன் அறிமுகமாகும் அட்டகாசமான ஸ்மார்ட் போன்!

எந்த நிறுவனம் தயாரிக்கிறது தெரியுமா? சாம்சங் நிறுவனம் புதியதாக அறிமுகம் செய்ய உள்ள கேலக்ஸி எஸ்10 ப்ளஸ் ரக ஸ்மார்ட்ஃபோன்.

சாம்சங் நிறுவனம் புதியதாக அறிமுகம் செய்ய உள்ள கேலக்ஸி எஸ்10 ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோனில் 5 கேமிராக்கள் கொண்டதாக இருக்கும் என்று தெரிய வருகிறது.

சமீபத்தில் தென்கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம், அதன் கேலக்ஸி எஸ்9 , கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களை அறிமுகம் செய்திருந்தது.

1530879005_samsung-galaxy-s10-plus

தற்பொழுது கேலக்ஸி எஸ் 10 ப்ளஸ் என்ற புதிய ஸ்மார்ட்ஃபோனை விரைவில் சாம்சங் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பில் புது முயற்சியாக, 5 கேமிராக்கள் கொண்டதாக கேலக்ஸி எஸ் 10 ப்ளஸ் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வகை ஸ்மார்ட்ஃபோனில் மொத்தம் 3 ரகம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

s10

இதன்படி, முதல் ரகத்தைச் சேர்ந்த கேலக்ஸி எஸ் 10 ப்ளஸ் 3 கேமிராக்கள் பின்புறமும், 2 கேமிராக்கள் முன்புறமும் கொண்டதாக தயாரிக்கப்படும் என்று சாம்சங் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதேபோல, 2வது ரகத்தைச் சேர்ந்த எஸ்10 ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோனில், முன்புறம் ஒரு செல்ஃபி கேமிரா, பின்புறம் 3 கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
மேலும், 3வது ரக எஸ்10 ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோனில், முன்புறம் ஒரு செல்ஃபி கேமிராவும், பின்புறம் 2 கேமிராவும் பொருத்தப்படும் என்று சாம்சங் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

Screenshot-2017-07-14-at-00.25.46

ஐஸ் யுனிவர்ஸ் என்ற பெயரில் ஒரு ட்விட்டர் பயனர், பொதுவான அம்சமாக, இந்த கேலக்ஸி எஸ்10 ப்ளஸ் ஸ்மார்ட்ஃபோன், எக்ஸினாஸ்(Exynos)9820, மாலி ஜி76 ஜிபியு (7 நேனோ மீட்டர் ஃபேப்ரிக்) ஆகியவற்றில் இயங்குபவையாக வடிவமைக்கப்பட உள்ளதாகக் கூறியிருக்கிறார்.

கேலக்ஸி எஸ் 10 ப்ளஸில் மிக துல்லியமான ஸ்மார்ட்ஃபோன் சேவை கிடைக்கும் என்றும், இந்த ஸ்மார்ட்ஃபோனின் கேமிராக்கள் 120 டிகிரி கோணம் வரை விரிவான புகைப்படங்கள், வீடியோ எடுக்கும் திறன் கொண்டவை என்றும், சாம்சங் தரப்பில் குறிப்பிடப்படுகிறது.

இதையும் படியுங்கள்

பாஜக கபில் மிஸ்ராவின் வெறுப்பு பேச்சே டெல்லியில் நீடிக்கும் வன்முறைக்கு காரணம் என்று கூறப்படுகிறது .  ஞாயிற்றுக்கிழமை, ஜாஃப்ராபாத் போராட்ட தளத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் அருகில் இருக்கும்  மஜ்பூர்-பாபர்பூர் மெட்ரோ நிலையத்திற்கு அருகே சிஏஏ ஆதரித்து மக்கள்  போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட   டெல்லி...
டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப், டெல்லி வன்முறைகள் குறித்துப் பேசும்போது மத சுதந்திரம் தேவை என்று தாம் (பிரதமர் மோதியுடன்) பேசியதாக குறிப்பிட்டார். அது குறித்து அவர்கள் கடுமையாக முயற்சி...
உணர்ச்சியற்ற, தொலைநோக்கு பார்வையில்லாத தலைவர்களை ஆட்சியில் அமர்த்தியதன் பலன் சிஏஏ. அதனால் ஏற்பட்ட விளைவு இந்த வன்முறைகள், அதனை மக்கள் இப்போது அனுபவிக்கிறார்கள் என்று ப சிதம்பரம் கூறியுள்ளார்.  சிஏஏ தெடர்பான எங்கள் எச்சரிக்கை செவிடான காதுகளில்தான் சென்று சேர்ந்தது என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம்...
பீகார் சட்டசபையில் என்ஆர்சிக்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பீகார் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பட்ஜெட் தொடரில் இரண்டாவது நாளான இன்று , பீகார் மாநிலத்தில் தேசிய குடிமக்களின் பதிவேட்டை (என்.ஆர்.சி) செயல்படுத்தக்கூடாது என்று சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றியது. தேசிய மக்கள்தொகை பதிவேட்டை...
டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் NDTV செய்தியாளர்கள் 3 பேர், கேமரா மேன் ஒருவர் ஆகியோர் மீது வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்தபோது போலீசார் யாரும் அங்கே இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  NDTV செய்தியாளர் அரவிந்த் குணசேகரை வன்முறைக் கும்பல் சூழ்ந்துகொண்டு தாக்குதல் நடத்தியது. அவரை சக செய்தியாளரான சவுரப் சுக்லா மீட்க முயன்றபோது வன்முறை கும்பல் தடியால் கடுமையாகத் தாக்கியது. 
ஞாயிற்றுக்கிழமை, ஜாஃப்ராபாத் போராட்ட தளத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் அருகில் இருக்கும்  மஜ்பூர்-பாபர்பூர் மெட்ரோ நிலையத்திற்கு அருகே சிஏஏ ஆதரித்து மக்கள்  போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட   டெல்லி பாஜக தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ரா, இன்னும் மூன்று நாட்களில் ஜாஃப்ராபாத் போராட்ட தளத்தை காவல் துறை அப்புறப்படுத்தவேண்டும். இல்லையேல்,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here