5 ஆண்டுகளில் 3400 பொதுத் துறை வங்கிக் கிளைகள் மூடல்; 75% எஸ்பிஐ கிளைகள் – ஆர்டிஐ-யில் வெளியான தகவல் 

0
364

கடந்த 5 ஆண்டுகளில் நாடெங்கும் 26 பொதுத் துறை வங்கிகளின்  3,400 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

26 பொதுத் துறை வங்கிகளின் 3,400 கிளைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இதில் 75% வங்கிகள் பாரத ஸ்டேட் வங்கியை சேர்ந்தவை என்றும் தெரியவந்துள்ளது. வங்கிகள் இணைப்பு நடவடிக்கை மூலமும் பல்வேறு கிளைகள் மூடப்பட்டதாக அரசின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நீமச்சைச் சேர்ந்த சமூக செய்லபாட்டாளர் சந்திரசேகர் கௌட் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தியாவில் எத்தனை பொதுத்துறை வங்கிகளின் கிளைகள் மூடப்பட்டுள்ளது என்ற விவரங்கள் கோரி ஆர் பி ஐ -யிடம் மனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு ஆர் பி ஐ அளித்துள்ள பதிலில்  2014 -15 நித் ஆண்டில் 90 கிளைகள் மூடப்பட்டுள்ளது. 2015-16 நிதி ஆண்டில் 126 கிளைகள் மூடப்பட்டுள்ளதாகவும், 2016-17 நித் ஆண்டில் 253 கிளைகள் மூடப்பட்டுள்ளதாகவும், 2017-18 நிதி ஆண்டில் மட்டும் 2083 கிளைகள் மூடப்பட்டுள்ளதாகவும், 2018-19 நிதி ஆண்டில் 875 கிளைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது –

வங்கிகள் இணைப்பை மத்திய அரசு முழுவீச்சில் மேற்கொண்டுள்ள நிலையில் இதனால் வேலையிழப்புகள் ஏற்படும் என தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் மூடப்பட்ட வங்கிக் கிளைகள் புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.


 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here