ஒன்ப்ளஸ் நிறுவனர் மற்றும் தலைவரான பீட்லா, கடந்த ஆண்டு புதிதாக ஸ்மார்ட்டிவி-க்கான புதிய பிரிவை தனது நிறுவனத்தில் தொடங்கியது. இதையடுத்து இந்தாண்டின் இறுதிக்குள் ஒன்ப்ளஸ்ஸ் மார்ட் டிவி வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளிவரும் தகவல்களின் படி வருகிற செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி ஒன்ப்ளஸ் ஸ்மார்ட் டிவி வெளியாகும் என்று கூறப்படுகிறது. சில சான்றிதழ் அறிக்கைகள் லீக் ஆனது மூலம் இத்தகவல்கள் வெளியாகி இருக்கலாம்.

மேலும், அடிப்படையில் OLED பேனல் உடன் ஒன்ப்ளஸ் டிவி வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 43 இன்ச்,55 இன்ச்,65 இன்ச் மற்றும் 75 இன்ச் ஆகிய நான்கு அளவுகளில் ஒன்ப்ளஸ் ஸ்மார்ட் டிவி அறிமுகமாகலாம். அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் மட்டுமே முதற் கட்டமாக இந்த டிவி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ளுடூத் 5.0 உடன் முற்றிலும் மாறுபட்ட டிவி அனுபவத்தை ஒன்ப்ளஸ் ஸ்மார்ட் டிவி வழங்கும் எனத் தெரிகிறது.ஹெச்டிஆர்
, 4K ரெசொலியூஷன் வசதிகளுடன் இந்த டிவி வரும் எனக் கருதப்படுகிறது. ஜியோமியின் Mi எல்இடிடிவி-க்குப் பெரும் போட்டியாக ஒன்ப்ளஸ் டிவி வரவாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.