ஜியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று(புதன்கிழமை) விற்பனைக்கு வந்தது. இந்தப் புதிய ரக ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட், எம்ஐ.காம் மற்றும் எம்ஐ ஹோம் கடைகளில் கிடைக்கும்.

ரெட்மி நோட் 7 ப்ரோ, ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இம்மாத துவக்கத்தில் அறிமுகமானது.

ரெட்மி நோட் 7 ப்ரோ ‘ஆஃரா டிசைனை’னோடு 6.3 இஞ்ச் ஃபுல் ஹெச்டி தொடுதிரை, வாட்டர் ட்ராப் வகை நாட்ச் ஆகியவற்றுடன் வருகிறது.

ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10 இயங்குதளம், ஆக்டா-கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 675 பிராசஸர் என ரெட்மி நோட் 7 ப்ரோவில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ போன்ற எம்ஐயூஐ 10 மென்பொருளில் இயங்குவதால் வேகமாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4ஜிபி, 6ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி, 128ஜிபி மெமரியும் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது. இதன் கேமரா சென்சார்களைப் பொறுத்தவரை 48 மெகா பிக்சல் முதல் நிலை சென்சாரும், 5 மெகா பிக்சல் இரண்டாம் நிலை டெப்த் சென்சாரும் உள்ளன.

செயற்கை நுண்ணறிவுடன் செல்ஃபி வசதிக்காக முன்புறத்தில் 13 மெகா பிக்சல் ஃபிரன்ட் ஷூட்டரும், 4K வீடியோ பதிவு செய்யும் கேமராவும் உள்ளன.

இந்தியாவில் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி ஸ்மார்ட்போனை ரூ.13,999க்கும் அதே போனின் மற்றோரு வகையான 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி வெரியண்ட் ரூ.16,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் நெப்டியுன் ப்ளூ, நெப்யூலா ரெட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் போன்ற நிறங்களில் வெளியாகிறது.

ஜியோமி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுக ஆஃபராக ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து 1,120 ஜிபி டேட்டாவையும், ஜியோ நிறுவனத்துடன் இணைந்து டபுள் டேட்டா ஆஃபர்களை வழங்க உள்ளது.

#RedmiNote7Pro, #48MP

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here