48 எம்பி கேமரா: 5000 எம்ஏஹெச் பேட்டரி: அசத்தும் மோட்டோ இ 7 பிளஸ்

Motorola is all set to make the Moto E7 Plus official in India. The smartphone will be launched today on Flipkart.

0
115

மோட்டோரோலாவின் சமீபத்திய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மோட்டோ இ 7 பிளஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் பிரேசிலில் இந்த புதிய மோட்டோஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில் 6.5 இன்ச் ஹெச்டிபிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் மிஸ்டி புளூ மற்றும் ட்விலைட் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது.

இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா, பின்புறம் கைரேகை சென்சார், பிளாஸ்டிக் பேக், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

மோட்டோ இ7 பிளஸ் சிறப்பம்சங்கள்:

  • 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ்விஷன் எல்சிடி ஸ்கிரீன்
  • ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர்
  • அட்ரினோ 610 ஜிபியு
  • 4 ஜிபி ரேம்
  • 64 ஜிபி மெமரி
  • ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
  • 48 எம்பி பிரைமரி கேமரா
  • 2 எம்பி டெப்த் சென்சார்
  • 8 எம்பி செல்ஃபி கேமரா
  • கைரேகை சென்சார்
  • வாட்டர் ரெசிஸ்டண்ட்
  • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
  • மைக்ரோ யுஎஸ்பி
  • 5000எம்ஏஹெச் பேட்டரி 
  • 10 வாட் சார்ஜிங்

இதன் விலை ரூ. 9499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

புதிய மோட்டோ இ 7 பிளஸ் ஸ்மார்ட்போன், ரெட்மி 9 பிரைம், சாம்சங் கேலக்ஸி எம் 11, மற்றும் ரியல்மிநர்சோ 20 போன்ற போன்களுக்கு நேரடி போட்டியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here