மாப்பிள்ளை தேடுகிறார் ஷோபனா

0
75
Shobana

நாற்பது வயதுவரை பேச்சிலர் என்பது சுதந்திரம். நாற்பதுக்கு மேல் அதுவே சிறை. மனிதர்களுக்கு சுதந்திரமாக இருப்பதைவிட ஏதோ ஒன்றின் அடிமையாக இருப்பதே சுகமானது. முழு சுதந்திரம் என்பது வெட்டவெளியில் எலியை விடுவதைப் போன்றது. எந்தத் திசையில் செல்வது என்று எலி திணறிவிடும். இதுதான் நம் எல்லை என்று சுருங்கிவிடுவது ஒருவகை பாதுகாப்பு.

47 வயதில் ஷோபனாவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படும் திருமண ஆசைக்காகத்தான் இந்த பிலாசபி.

ஷோபனாவைப் பற்றி கதைச்சுருக்கம் சொல்ல தேவையில்லை. அற்புதமான நடிகை. அதிஅற்புதமான டான்சர். திருமணமாக வேண்டிய வயதில் ஏனோ இல்லறத்துக்குப் பதில் நடனத்தை தேர்வு செய்தார். தனது நாட்டியப்பள்ளியே மூச்சு என்று அதில் ஒன்றிப் போனார். ஒருகட்டத்துக்கு மேல் அனைவருக்கும் ஏற்படும் தனிமை அவரைவாட்ட, அனந்த நாராயிணி என்ற சிறுமியை தத்தெடுத்து வளர்த்தார். அதுவும் போதவில்லை. திருமணம் செய்யலாம் என்று அவர் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் கசிகின்றன. ஷோபனா இதனை இதுவரை உறுதி செய்யவில்லை.

ஷோபனாவைக் குறித்த இந்த செய்தி உண்மையாகட்டும், அவருக்கு விரைவில் திருமணம் நடக்கட்டும். தனது வாழ்க்கையின் முழுமையை அவர் தனது இல்லற வாழ்க்கையில் உணரட்டும்.

இதையும் படியுங்கள் : சென்னை: 71 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

இதையும் படியுங்கள் : விவசாயத்திற்கு 12 மணிநேரம் மும்முனை மின்சாரம்': தமிழக அரசு வெளியிட்டுள்ள 7 அறிவிப்புகள்

இதையும் படியுங்கள் : ஜிஎஸ்டி: எந்தப் பொருளுக்கு எத்தனை சதவிகித வரி?

இதையும் படியுங்கள் : பதினெட்டாவது அட்சக்கோடு : வன்முறைகளும் மனித மாண்புகளும் விலகும் புள்ளி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்