இந்திய தேசமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஆதார் விவகாரம், அயோத்தி விவகாரம், முஸ்லிம் பலதார மண விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கோடைக்கால விடுமுறைக்கு பிறகு உச்ச நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) திறக்கப்பட்டு மீண்டும் இவ் வழக்குகளைக் கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தில்லி துணை நிலை ஆளுநருக்கும், தில்லி அரசுக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் விவகாரம் தொடர்பான தனது தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளியிடவுள்ளது. 44 நாள்கள் கோடை விடுமுறைக்கு பிறகு முழு வீச்சில் உச்ச நீதிமன்றம் மீண்டும் திங்கள்கிழமை முதல் செயல்படவுள்ளது.
தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் மற்றும் ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஆகியோரின் நியமனத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள காற்று மாசு, மணிப்பூர் என்கவுன்ட்டர் விவகாரம் உள்ளிட்ட மேலும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here