கர்நாடக மாநிலத்திற்காக மத்திய அரசு வழங்கிய நிதியை, முதல்வர் சித்தராமையா தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 12ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை மே 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் கொப்பல் பகுதியில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமித்ஷா, ”கர்நாடக மாநில மக்கள் மின்சாரம் மற்றும் வேலைவாய்ப்பின்றி தவித்து வரும்நிலையில், முதல்வர் சித்தராமையா 40 லட்சம் ரூபாய் செலவில் கைக்கடிகாரம் அணிந்துள்ளார்” என குற்றம் சாட்டினார். மேலும் அவர், 13வது நிதி ஆணையத்தின்கீழ் 2,19,506 கோடி ரூபாய் மாநில வளர்ச்சிக்காக மோடி தலைமையிலான மத்திய அரசு அளித்துள்ளதாகவும், ஆனால் சித்தராமையா, அதனை தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இதையும் படியுங்கள்: உங்கள் ராணுவ வலிமையெல்லாம் வெறும் கண்காட்சிக்குத்தானா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்