4 வருடத்தில் 19 முறை மட்டுமே நாடாளுமன்றத்தில் பேசிய மோடி – ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பொது நல வழக்கு

0
178

பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் இதுவரை வெறும் 19 நாட்கள் மட்டுமே பேசியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் சஞ்சய் சிங் பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு மீது இன்று விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது .இந்திய பிரதமர்களில், பிரதமர் மோடிதான் மிகவும் குறைவான நாட்கள் நாடாளுமன்றத்தில் பேசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியில் பல முறை நாடாளுமன்றம் கூடியுள்ளது. ஆனால் மொத்தம் 19 நாட்கள் மட்டுமே அவர் நாடாளுமன்றம் வந்துள்ளார். அதிலும் வருடத்திற்கு 4 நாட்கள் மட்டுமே அவர் நாடாளுமன்றம் வந்துள்ளார். முக்கியமான நாட்களில் அவர் நாடாளுமன்றம் வரவேயில்லை.

நாடாளுமன்றம் வந்த பின்பும் பெரும்பாலான சமயங்களில் அவர் பேசாமலே இருந்துள்ளார். அவர் ஒரு முறை அரசு மசோதா பற்றி பேசினார். 5 முறை புதிய அமைச்சர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். 6 முறை சில திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இரண்டு முறை நேரு குறித்து குற்றச்சாட்டு வைத்துள்ளார். இரண்டு முறை சிறப்பு கலந்துரையாடல்களில் கலந்து கொண்டார்.

நாடு முழுவதும் கடந்த நான்கு ஆண்டுகளில் 800 பேரணிகளில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டுள்ளார். அதில் பிரச்சாரங்களும் அடங்கும். நாட்டின் முக்கியமான பிரச்சினைகளாக இருந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை , அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, விவசாயிகளின் தற்கொலை, வேலையின்மை, வங்கி மோசடிகள், கும்பல் வன்முறை, பெண்களின் பாதுகாப்பு போன்றவைப் பற்றி பலமுறை எதிர்க்கட்சிகள் பேச வலியுறுத்தியும் பிரதமர் மோடி மௌனமாகவே இருந்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் பிரதமர் மோடியின் அலுவலகத்தில் இருந்தபோதும் பலமுறை அவர் நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களில் கலந்துக் கொள்ளவில்லை. நாடாளுமன்றத்தில் அவர் இருந்த போதும் பலமுறை அவர் பேசியதில்லை எல்லா வாரமும் வானொலி மூலம் , மான் கி பாத்தில் பேசியுள்ளார்.

பிரதமர் மோடியை நாடாளுமன்றத்துக்கு வருமாறு பரிந்துரைத்து, எம்.பி.க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று பொது நல மனுவில் சஞ்சய் சிங் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்