மக்களவையை கலைத்துவிட்டு இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுடன் சேர்த்து பொதுத் தேர்தலை சந்திக்க தயாரா? என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி சவால் விடுத்துள்ளது.

மக்களவைக்கும், மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை பாஜக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் இவ்வாறு சவால் விடுத்துள்ளது .

காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் டெல்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது …

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தல்களை ஒத்திவைத்து மக்களவைத் தேர்தலுடன் நடத்துவது என்பது அரசியலமைப்பு சட்டப்படி சாத்தியம் இல்லை.

அதே நேரத்தில் மக்களவையை உடனடியாக கலைத்துவிட்டு, இந்த 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களுடன் சேர்ந்து மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த முடியும். ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வரும் பிரதமர் மோடி இதற்கு தயாரா? மக்களவையை இப்போது கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்க அவர் முன்வருவாரா? உண்மையிலேயே தேச நலன் கருதிதான் மக்களவைக்கும், மாநிலப் சட்ட பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற கருத்தை பாஜக வலியுறுத்தி வருகிறது என்றால், அவர்கள் உடனடியாக மக்களவையை கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்கலாம்.

மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவதை காங்கிரஸ் வரவேற்கிறது. அத்துடன் பாஜகவைத் தோற்கடித்து, அவர்கள் ஆட்சியை வீட்டு அனுப்பவும் நாங்கள் தயாராக இருக்கிறேறாம். ஒரே தேசம், ஒரே நேரத்தில் தேர்தல் என்ற பாஜகவின் கருத்தில் தொடக்கத்தில் இருந்தே தெளிவு இல்லை என்று கூறினார்.

Courtesy : Hindustan Times

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here