(December 9, 2015)

சென்னை மாநகர இலவசப் பேருந்துகளில் நான்கு நாட்களில் 1 கோடியே 54 இலட்சத்து 70 பேர் பயணம் செய்துள்ளனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மக்களின் பயணத்திற்காக சென்னை மாநகரப் பேருந்துகளில் டிசம்பர் 5ஆம் தேதி சனிக்கிழமை முதல் டிச.8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை இலவசமாகப் பயணம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி சனிக்கிழமையன்று 35.21 லட்சம் பேரும், ஞாயிற்றுக்கிழமையன்று 34.54 லட்சம் பேரும், திங்கட்கிழமையன்று 42.21 லட்சம் பேரும், செவ்வாய்க்கிழமையன்று 42.74 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்