4 தொகுதி இடைத்தேர்தலில் பரிசுப்பெட்டகம் சின்னம்: டிடிவி மனுத்தாக்கல்

0
172

 மே மாதம் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில்  தங்களுக்கு பரிசுப்பெட்டகம் சின்னம் வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மனுதாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் வேலூர் நீங்கலான 38 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கட்சிக்கு ஒரே சின்னம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி பரிசுப்பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டது.

தற்போது மீதமுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி,  ஓட்டப்பிடாரம் (தனி) மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு வரும் மே 19-அன்று தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதையடுத்து இந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த டிடிவி,  சமீபத்தில் அமமுகவை  தேர்தல் ஆணையத்தில் கட்சியாக பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் நான்கு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில்  தங்களுக்கு பரிசுப்பெட்டகம் சின்னம் வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.            

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here