இடைத் தேர்தல் வாக்குப் பதிவு வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 19) நடைபெறவுள்ள நிலையில் நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் பிரசாரம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறுகிறது. 

மேலும், மக்களவை பொதுத் தேர்தல், 18தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளுடன் இந்த நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குகளும் வரும் 23ஆம் தேதி எண்ணப்படும்.

தமிழகத்தில் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் கடந்த ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 22 முதல் 29ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்று, இறுதி வேட்பாளர் பட்டியல் மே 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

இந்த நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் 137பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.  நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் 137வேட்பாளர்களில், 131 பேர் ஆண்கள். ஆறு பெண்கள் ஆவர். அரவக்குறிச்சி தொகுதியில் 63 பேரும், திருப்பரங்குன்றத்தில் 37 பேரும், சூலூரில் 22 பேரும், ஓட்டப்பிடாரத்தில் 15 பேரும்  களம் இறங்கியுள்ளனர்.

கடந்த 15 நாள்களுக்கும் மேலாக நான்கு சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் வெள்ளிக்கிழமை (மே 17) மாலை 5 மணியுடன் நிறைவுபெறுகிறது. 
அதன் பின்னர், தொகுதிக்கு தொடர்பில்லாத நபர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவர். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், பணியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை மாலையில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும்.

 நான்கு தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களும் வைக்கப்பட உள்ளன.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here