இந்திய விண்வெளி திட்டத்தில் முதல் முறையாக நான்கு டன் எடையுள்ள தொலைத்தொடர்பு செயற்கை கோள்களைச் சுமந்து செல்லும் ராக்கெட்டை ஜூன் மாதம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : தலைத் துண்டிக்கப்பட்ட இளைஞர் : சட்டம் ஒழுங்கில் சறுக்கும் புதுச்சேரி

விண்வெளித் துறையில் சர்வதேச நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலையில்லாமல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஜி.எஸ்.எல்.வி மார்க்3 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டம் வெற்றிகரமாக முடிந்தால் இந்திய விண்வெளித் துறையில் ஒரு மைல் கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : ‘எஸ்பிஐ பொதுமக்களுக்கு எதிராக போர் தொடங்கியுள்ளது’

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிரண்குமார், “இஸ்ரோ அடுத்தகட்டமாக ஜி.எஸ்.எல்.வி மார்க்3 என்ற திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் ஸ்ரீ ஹரிகோட்டாவில் தயார் நிலையில் உள்ளது. ஜூன் முதல் வாரத்தில் ராக்கெட்டை விண்ணில் செலுத்தவுள்ளோம். விண்வெளிக்கு மிகவும் கடினமான செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும் வகையில் ஜி.எஸ்.எல்.வி மார்க்3 ராக்கெட் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 4 டன் எடையுள்ள செயற்கை கோள்களைக்கூட இந்த வகை ராக்கெட்டால் எளிதாக சுமந்து செல்ல முடியும்” என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : காலவரையற்ற வேலைநிறுத்தம் – விஷாலுக்கு எதிராக திரளும் திரையரங்கு உரிமையாளர்கள்

மேலும் அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை விண்வெளியில் 36,000 கிமீ தொலைவில் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்த வலிமையான ராக்கெட்டுகள் தேவை. அந்த வகை ராக்கெட்டுகளை இந்தியா தயாரிக்காததாலும், இதற்கான செலவும் மிக அதிகம் என்பதாலும் இதுவரை ஐரோப்பிய ராக்கெட்டுகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டி யிருந்தது. ஆனால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஜிஎஸ்எல்வி மார்க்3 ராக்கெட் மூலம் இந்திய மண்ணில் இருந்தே செயற்கைக்கோள்களை ஏவி, அதை வெற்றிகரமாக நிலைநிறுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்