பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீதான கால்நடை தீவன ஊழல் தொடர்பான நான்காவது வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பீகார் மாநில முதல்வராக பதவி வகித்த காலத்தில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஐந்து வழக்குகள் தொடரப்பட்டன. இதில் மூன்று வழக்குகளில் 2013, 2017 மற்றும் கடந்த ஜனவரியில் தீர்ப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் 1995ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 1996ஆம் ஆண்டு ஜனவரி வரை தும்கா கருவூலத்தில் 3.76 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றதாகத் தொடரப்பட்ட நான்காவது வழக்கிலும் அவரைக் குற்றவாளி என, கடந்த மார்ச் 17ஆம் தேதி சிபிஐ நீதிமன்றம் அறிவித்தது. இதற்கான தண்டனை விவரத்தை சனிக்கிழமை (இன்று) நீதிமன்றம் அறிவித்தது. அதில், லாலுவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 60 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது.

இதையும் படியுங்கள்: உலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here