பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீதான கால்நடை தீவன ஊழல் தொடர்பான நான்காவது வழக்கிலும், அவரைக் குற்றவாளி என அறிவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், பீகார் மாநில முதல்வராக பதவி வகித்த காலத்தில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட தீவனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஐந்து வழக்குகள் தொடரப்பட்டன. இதில் மூன்று வழக்குகளில் 2013, 2017 மற்றும் கடந்த ஜனவரியில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர் தற்போது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 1995ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 1996ஆம் ஆண்டு ஜனவரி வரை தும்கா கருவூலத்தில் 3.76 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றதாகத் தொடரப்பட்ட நான்காவது வழக்கிலும் அவரைக் குற்றவாளி என அறிவித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த நான்காவது வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா உட்பட ஐந்து பேரை நீதிமன்றம் விடுவித்தது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here