போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்கிறது.

ஊதிய உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடந்த வியாழக்கிழமை (ஜன.4) முதல், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தைத் திரும்பப்பெறாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் தொழிலாளர்களைத் தமிழக அரசு எச்சரித்தது. ஆனால், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் திட்டவட்டமாக அறிவித்து விட்டன,

இந்நிலையில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்கிறது. ஞாயிற்றுக்கிழமை (இன்று) தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. சென்னையில் சென்னையில் வார நாட்களைபோன்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை (இன்று) வழக்கம்போல் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படியுங்கள்: அம்மாவின் மீது அன்பு வைத்திருப்பவரா நீங்கள்? இதைப் பாருங்கள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்