ஜியோமி நிறுவனம் சமீபத்தில் தனது முதல் ரெட்மி டி.வியை சீனாவில் அறிமுகப்படுத்தியது.  இந்த 70-இன்ச் அளவிலான ரெட்மி டி.வி.,  ‘ரெட்மி டி.வி  70-இன்ச்’ எனப் பெயரிடப்பட்டது.  இந்த டிவி 4கே தரம், ஹெச்.டி.வி வசதி, குவாட்-கோர் ப்ராசஸர், பேட்ச்வால் என பல அம்சங்களை கொண்டுள்ளது.

சீனாவில் இந்த 70-இன்ச் ரெட்மி டி.வி. செப்டம்பர் 3ஆம் தேதியிலிருந்து இந்திய மதிப்பில் ரூ.38,000 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த டி.வியின் இந்த டி.வி இந்தியாவில் எப்போது வெளிவரும் என்பது குறித்த எந்த விபரங்களும் வெளியாகவில்லை. இந்நிலையில், ஜியோமி இந்தியாவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் டீசர் ஒன்றைப் பகிர்ந்துள்ளது.

அந்த டீசரில் காட்டப்படும்  மெல்லிய பெசல்களைக் கொண்ட டி.வி, ரெட்மி 70-க இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மற்றொரு டிவீட்டில், இந்த மாத இறுதியில் பல ஸ்மார்ட்ஹோம் சாதனங்கள் இந்தியாவில் அறிமுகப் படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த புதிய ரெட்மி டி.வி.யின்  பெயரை வெளியிடப்படாத நிலையில், வரும் செப்டம்பர் 17 ஆம்தேதி ‘ஸ்மார்ட்டர்லிவிங் 2020’ வெளியிடப்படுமெனக் கூறப்பட்டுள்ளது.