சாம்சங் நிறுவனம் 2019 ஆண்டிற்கான தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் நோட் சீரிஸ், கேலக்ஸி நோட் 10 உருவாக்கி வருகிறது. புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங் பல்வேறு மாற்றங்களை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாம்சங், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் தனது கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருந்தது.

புதிய நோட் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் நான்கு பிரைமரி கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவற்றில் 12 எம்.பி. f/2.4 டெலிபோட்டோ லென்ஸ், OIS, இரண்டாவது 12 எம்.பி. f/1.5-f/2.4 டூயல் அப்ரேச்சர், OIS வசதி, மூன்றாவது 16 எம்.பி. f/2.2 அப்ரேச்சர் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் நான்காவது 3D ToF சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இத்துடன் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் 5ஜி வேரியண்ட் மற்றும் 4ஜி வேரியண்ட் என இரண்டு வேரியண்ட்டுகளில் வருகிறது.

கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் போது, அதில் வழங்கப்பட்ட 6.4 இன்ச் டிஸ்ப்ளேவை போல் இல்லாமல் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் 6.75 இன்ச் டிஸ்ப்ளே இருக்கும் என கூறப்படுகிறது.

note-10

புதிய நோட் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம், ஒன் யு.ஐ. கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது. இதுதவிர கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் சூப்பர் ஸ்லோ மோஷன் வீடியோ பதிவு செய்யும் வசதி, IP68 தர சான்று பெற்ற வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, டால்பி அட்மாஸ் ஆடியோ சப்போர்ட் போன்ற சிறப்பம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மற்றும் 12 ஜி.பி. ரேம், 1000 ஜி.பி. மெமரி என மூன்று வித வேரியண்ட்களில் வெளிவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here