பருவமழை நீடித்து வருவதால் கபிலா, காவிரி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பி வருவதால், தமிழ்நாட்டிற்கு வரும் காவிரியாற்றில், வினாடிக்கு 39 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் நீர் திறப்பின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கபினி அணை நிரம்ப ஒரு அடி மட்டுமே இருப்பதால், அணையிலிருந்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. குடகு மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கே.ஆர்.எஸ். அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அணையின் மொத்த கொள்ளளவான 124 புள்ளி 80 அடியில், தற்போது 110 அடியை தாண்டி நீர்மட்டம் உள்ளது. கனமழை தொடர்வதால் அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்