370 நீக்கம்; 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுகிறது ஜம்மு-காஷ்மீர்; அமித்ஷா பரிந்துரை

0
362

சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் செயல்படும்; சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் என்று அமித் ஷா அறிவித்தார். 

இதனைத் தொடர்ந்து வெங்கய்யா நாயுடுவை பார்த்து – நீங்கள் அவசரநிலையால் பாதிக்கப்பட்டவர், இப்போது அவசரநிலை திரும்பி வந்துள்ளது, இது ஜனநாயகப் படுகொலை என்றார் வைகோ. இது அர்ஜன்சி – எமர்ஜன்சி அல்ல என்றார் வெங்கய்ய நாயுடு. 

 இது குறித்து முன்னாள் முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி தனது டிவிட்டர் பக்கத்தில் இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு நாள். சட்டப்பிரிவு 370ஐ இந்திய அரசு நீக்கியது சட்டவிரோதமானது மற்றும் அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்டி தெரிவித்துள்ளார். இன்னொரு ட்வீட்டில் தம்மை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவித்த மெஹ்பூபா, தம்மால் எவ்வளவு நேரம் தகவல் தொடர்பு செய்ய முடியும் என்பது தெரியாது. இதுதான் நாம் ஏற்றுக்கொண்ட இந்தியாவா என்று பதிவிட்டுள்ளார்.