35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children

0
855

உலகெங்கிலும் 35 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் அல்லது ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை போர் நடைபெறும் பகுதிகளில் வாழ்கின்றனர் என்று குழந்தைகள் நல அமைப்பான “சேவ் த சில்ட்ரன் “ (Save the Children ) தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இக்குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

போர் நடைபெறும் பகுதிகளில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மிக மோசமான நிலையில் இருக்கிறது. இக்குழந்தைகள்
கொல்லப்படுகிறார்கள் அல்லது ஊனமுற்றோர்களாக ஆக்கப் படுகிறார்கள். மேலும் படைகளில் அல்லது தற்கொலைப் படைகளில் இக்குழந்தைகள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும் இந்த அறிக்கைக் கூறுகிறது .

இக்குழந்தைகளுக்கு மனித நேய உதவிகள் மறுப்பு 15 மடங்கு அதிகரித்துள்ளது . இவ்வாறு மனித நேய உதவிகள் மறுக்கப்படுவது அவர்களை நேரடியாக குறிவைத்து நடைபெறவில்லை . அவர்களின் வாழ்க்கையை ஆயுதமாக வைத்து நடைபெறுகிறது.

சிரியாவில் பஷார் ஆஸாத் அரசு போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்புவதில் மிகவும் தாமதத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சிரியாவின் ஐநா மனித உரிமைகள் ஆலோசகர் ஜான் எகேலான்ட் கூறியுள்ளார். சிரியாவில் ஆயிரகணக்கான பொதுமக்கள் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போதுமான உணவு , நீர், மருந்துகள் இல்லாமல் வாழ்கின்றனர்.

சிரியாவில் போர் விதிமுறை மீறல்கள் அதிகமாகவே நடக்கிறது. இங்கு மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்களில் மீது தாக்குதல்கள் நடந்துக் கொண்டிருக்கிறது. ரசாயன ஆயுதங்கள் மற்றும் கொத்தெறி குண்டுகள் கொண்டு பொதுமக்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்துகிறார்கள் என்று இவ்வறிக்கைக் கூறுகிறது .

1990 லிருந்து 1995 வரையில் 20 கோடி குழந்தைகள் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வந்தார்கள். 2016 ஆம் ஆண்டில் 35.7 கோடி குழந்தைகள் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள் என்று இவ்வறிக்கைக் கூறுகிறது

பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பெரும்பாலானோர் ஆசியாவில் வாழ்கின்றனர். பர்மாவில், அரசு ராணுவத்தால் ஒடுக்கப்பட்ட ரோகிங்யா இனக் குழந்தைகள் அதிகமானோர் உள்ளனர் என்று இவ்வறிக்கை கூறுகிறது. ஆப்கானிஸ்தானத்திலும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பலர் உள்ளனர். ஆயினும் மிகவும் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகள் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளனர் என்றும் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா நாடுகள் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளாக உள்ளன என்றும் இவ்வறிக்கைக் கூறுகிறது .

syria 7

syria 11

ஆப்பிரிக்காவில் ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தை போரினால் பாதிப்படைந்து இருக்கிறது . 2016 ஆம் ஆண்டில் சிரியா, ஏமன், ஈராக் பகுதிகளில் வாழும் குழந்தைகளில் 5 இல் இரண்டு பேர் போர் நடைபெறும் இடத்திலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அல்லது மரண தாக்குதல் நடைபெறும் பிற இடங்களில் வாழ்கின்றனர். உலகில் மிகவும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றான காங்கோவில் நடக்கும் போரினால் குழந்தைகள் பசி, பட்டினி, மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருக்கிரார்கள் .

“போர் நடைபெறும் பகுதிகளில் வாழும் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்துவது முதல் தற்கொலை படை தாக்குதல்களுக்கு பயன்படுத்துவது வரையிலான மனித உரிமை மீறல்கள் நடந்துக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய வீடுகள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போர்க்களமாக மாறியுள்ளன” என்று டென்மார்க்கின் முன்னாள் பிரதமர் கூறியுள்ளார்.

“இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்கள் கூடி முயற்சி செய்தால் இந்த குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஒருங்கிணைந்த நடவடிக்கை, சர்வதேச சட்டங்கள் மற்றும் தரங்களைக் காத்தல் , சட்டங்களை மீறுபவர்களை கணக்கில் கொண்டு தீவிர நடவடிக்கை எடுத்தல், போரினால் நொறுக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் போன்றவற்றை கருத்தில் கொண்டு நாங்கள் செயலாற்றி வருகிறோம்” என்று save the children அமைப்பைச் சேர்ந்த கரோலின் ஆன்னிங் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

இதையும் படியுங்கள்: உலக கோடீஸ்வரர்கள் பட்டியல் 2018; 2மடங்காக உயர்ந்த கவுதம் அதானியின் சொத்து மதிப்பு

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்