33 வங்கிகளில் ரூ47204 கோடி கடன் பெற்று மோசடி செய்த பூஷன் பவர் & ஸ்டீல் லிமிடெட்

0
347

அலகாபாத் வங்கி சனிக்கிழமை ரூ1774 கோடியை பூஷன் பவர் அண்ட் ஸ்டீல் லிமிடெட் ஏமாற்றி விட்டதாக ரிசர்வ் வங்கியிடம் தெரிவித்தது. 

 முன்னதாக  பஞ்சாப் நேஷனல் பாங்க், ரூ. 3,805.15 கோடி கடன் முறைகேடு செய்ததாக பூஷன் பவர் அண்ட் ஸ்டீல் லிமிடெட்  நிறுவனத்தின் மீது புகார் தெரிவித்திருந்தது. இந்த நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்ட நிறுவனம்   இந்நிறுவனம் பல வங்கிகளில் இருந்து மொத்தமாக  ரூ. 47,204 கோடியை கடனாகப் பெற்று மோசடி செய்துள்ளதாக சிபிஐ புகார் பதிவு செய்திருக்கிறது.

அலகாபாத் வங்கியிலிருந்து பெற்ற கடன் தொகையான ரூ. 1,774.82 கோடியை இந்நிறுவனம் முறைகேடான வழிகளில் திருப்பிவிட்டது . இதுகுறித்து அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உள்ளதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.

பூஷன் பவர் லிமிடெட் நிறுவனத்தின் மீது கடந்த வாரம் புகார் அளித்திருந்த பஞ்சாப் நேஷனல் பாங்க், இந்த நிறுவனம் வங்கியில் பெற்ற கடனை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளது என்று புகார் செய்திருந்தது. பஞ்சாப் தேசிய வங்கியிலிருந்து இந்நிறுவனத்திற்கு முறைகேடாக பெறப்பட்ட 85% நிதி, அதாவது ரூ. 4,399 கோடி  முடக்கப்பட்டுள்ளது.

கடநாக பெற்றப் பணத்தை  முறைகேடாகப் பயன்படுத்துதல், கணக்கில் முறைகேடு செய்து நிறுவனங்களின் கூட்டமைப்பிலிருந்து நிதி திரட்டல் போன்ற மோசடிகளை செய்ததாக இந்நிறுவனத்தின் மீது அலகாபாத் வங்கியும் குற்றம்சாட்டியிருக்கிறது.

பூஷன் பவர் லிமிடெட் நிறுவனம் ரூ. 2,348 கோடி பணத்தை அதனுடைய இயக்குனர்கள் மற்றும் ஊழியர்கள் மூலம் பஞ்சாப் நேஷனல் பாங்க், ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், ஐடிபிஐ வங்கி, யூகோ வங்கி ஆகிய வங்கிகளின் கடன் கணக்கிலிருந்து 200-க்கும் அதிகமான போலி நிறுவனங்களுக்கு காரணமே இல்லாமல் பணம் பரிமாற்றம் செய்துள்ளதாக சிபிஐ  புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் தொகையை தவறாகப் பயன்படுத்தியதன் பேரில் இந்நிறுவனத்தின் தலைவர் சஞ்சய் சிங்கால், துணைத் தலைவர் ஆர்த்தி சிங்கால் மற்றும் இயக்குனர்கள் மீது சந்தேகத்துக்குரிய நபர்கள் என முதல் தகவல் அறிக்கையில் பெயர் குறிப்பிட்டுள்ளது சிபிஐ.

இந்த நிறுவனம் 33 வங்கிகளிடமிருந்து ரூ. 47,204 கோடியை 2007-2014-ஆம் ஆண்டு வரை பெற்று, மோசடி செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் கொடுத்த வங்கிகளில் முதன்மையானதாக உள்ளதோடு, மற்ற வங்கிகளைப் போல இந்நிறுவனத்தின் வங்கிக் கணக்கை செயல்படாததாக அறிவித்துள்ளது” என சிபிஐ கூறியிருந்தது.

அரசு வங்கிகளில்  கடன் பெற்று, அதை வெளிநாடுகளில் உள்ள போலி நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டு, நிறுவனம் திவாலானதாக அறிவித்திருக்கிறது சஞ்சய் சிங்காலின் பூஷன் பவர் அண்ட் ஸ்டீல் லிமிடெட் . 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here