32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா : ‘ரெட்மி Y3’

0
438

சியோமி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட ட்வீட்டில், 24 ஆம் தேதி ரெட்மி Y3 ரிலீஸ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி Y3 போன் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்பது பற்றி அதிகாரபூர்வ தகவல் கொடுத்துள்ளது சியோமி நிறுவனம். அசத்தலான செல்ஃபிக்களை எடுப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் Y3 பற்றி தொடர்ந்து பரபர தகவல்களை சியோமி வெளியிட்டு வந்தது. இந்நிலையில் வரும் 24 ஆம் தேதி, இந்திய சந்தையில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரிலீஸ் தேதியைத் தவிர மற்ற எந்தத் தகவலையும் சியோமி நிறுவனம் வெளியிடவில்லை. 

சியோமி நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட ட்வீட்டில், 24 ஆம் தேதி ரெட்மி Y3 ரிலீஸ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 அன்று, மதியம் 12 மணிக்கு ரெட்மி Y3 வெளியிடப்படும் என்று #32MPSuperSelfie என்ற ஹாஷ் டேக்குடன் ட்வீட் பதிவிடப்பட்டிருந்தது. அந்த ட்வீட்டுடன் இணைக்கப்பட்டுள்ள படம், வாட்டர்-ட்ராப் நாட்ச் டிஸப்ளே வசதி போனில் இருக்கும் என்பதை கூறும் வகையில் இருக்கிறது. 
 h

சாம்சங்கின் 32 மெகா பிக்சல் ISOCELL ப்ரைட் GD1 இமேஜ் சென்சார்தான் செல்ஃபி கேமராவுக்குப் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், வெகு நேரம் பேட்டரி திறன் இருப்பதற்கு சியோமி நிறுவனம் இந்த போனில் பிரத்யேக சாதனத்தைப் பொருத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து சியோமி நிறுவனம் சார்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றாலும், 4000 எம்.ஏ.எச் பேட்டரியை Y3 போன் பெற்றிருக்கலாம் எனப்படுகிறது. 

கேட்ஜெட்ஸ் 360, ரெட்மி Y3 வெளியீட்டு நிகழ்ச்சிக்கு செல்லும். எனவே, சீக்கிரமே போன் எப்படி இருக்கிறது என்பதை நாங்கள் ரிவ்யூ செய்வோம்.