300 கோடி பட்ஜெட்டில் விக்ரம் நடிக்கும் மஹாவீர் கர்ணா

0
324
Vikram

300 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மஹாவீர் கர்ணா என்ற புராணப் படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இந்தப் படத்தை இயக்குகிறார்.

பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு மகாபாரத கதையை படமாக்கும் முயற்சியில் பலரும் இறங்கியுள்ளனர். மோகன்லால் நடிப்பில் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் புராண கதை ஒன்று படமாக்கப்பட உள்ளதாக அறிவித்தனர். அமீர்கான் மகாபாரதகதையை படமாக்கும் முயற்சியில் உள்ளார். இந்நிலையில், யுனைடெட் ஃபிலிம் கிங்டம் நியூயார்க் என்ற நிறுவனம் விக்ரம் நடிப்பில் மஹாவீர் கர்ணா என்ற படத்தை தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் எடுக்கவிருப்பதாகவும், படத்தின் பட்ஜெட் 300 கோடிகள் என்றும் அறிவித்துள்ளது.

மலையாளத்தில் பிருத்விராஜ், பார்வதி நடித்த என்னு நின்ற மொய்தீன் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த வருடம் அக்டோபருக்கு மேல் படத்தை தொடங்கி 2019 டிசம்பரில் படத்தை வெளியிடுகின்றனர்.

இதையும் படியுங்கள் : கூகுளை நடத்துவதும் மீன் கடை நடத்துவதும் ஒன்றா?

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்