30 வருட பாஜக- சிவசேனா கூட்டணியை உடைத்த தலைமை சூத்ரதாரி சரத் பவார்? பின்னணித் தகவல்கள்

0
409

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு சிவசேனாவை பாஜகவிடமிருந்து பிரித்ததில் முக்கிய பங்கு உண்டு. உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரேயின் அரசியல் எதிர்காலத்தை சுட்டிக்காட்டி பாஜகவை மகாராஷ்டிராவில் ஒன்றும் இல்லாமல் செய்திருக்கிறார் சரத் பவார்.  

ஆரம்பத்திலிருந்தே உத்தவ் தாக்கரே ஆட்சியை பகிர்ந்தால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி என்பதில் உறுதியாக இருந்தார்.கடந்த 15 நாட்களில் பாஜக எடுத்த அஸ்திரம் எல்லாம்  உத்தவ் தாக்கரேயின் பிடிவாதத்திடம்   தோற்றுவிட்டது .

சிவசேனா-பாஜக கூட்டணிக்கு வயது  30 ஆண்டுகள் . ஆட்சியில் பங்கு என்பதைக் காட்டி சிவசேனா தனது கூட்டணியை முறித்துக் கொள்ளும் என்று பாஜக ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. சிவசேனாவுக்கு அதிகமாக அமைச்சரவையில் இடம் கொடுத்தால்  கடைசியில் சிவசேனா சமாதானம் செய்துக் கொள்ளும் என்றே மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள பாஜக தலைவர்கள்  எதிர்பார்த்திருந்தார்கள். அதைத் தொடர்ந்து இரண்டு காவிக்கட்சிகளும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கலாம் என்றே நினைத்திருந்தது பாஜக. 

ஆனால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவிடம் பேசியிருந்தார். சிவசேனா 2014 தேர்தலில் தனியாக போட்டியிட்டு 68 இடங்களில் வெற்றி பெற்றதையும்  2019 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு வெறும் 54 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றதையும் சரத் பவார் உத்தவ் தாக்கரேயிடம் சுட்டிக்காட்டி பேசியுள்ளார். இது தொடருமேயானால் சிவசேனா காணாமல் போய்விடும் அவரது மகன் ஆதித்ய தாக்க்ரேயின் அரசியல் எதிர்காலமும் காணாமல் போய்விடும் என்றும் உத்தவ் தாக்கரேயிடம் கூறியுள்ளார் சரத் பவார். பாஜக ஆதித்யா தாக்கரேயை  அரசியலில் இல்லாமல் செய்து விடும் என்றும் சரத் பவார் கூறியதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.    

மேலும் பாஜக நிழலில்  (பாஜகவுடன் இருந்தால் ) சிவசேனா கட்சிக்கு வளர்ச்சி இருக்காது என்றும் பாஜக பல மாநிலங்களில் மாநிலக் கட்சிகளை அழித்து ஆட்சியை பிடித்திருக்கிறது என்றும் சரத் பவார் உத்தவ் தாக்கரேயிடம் கூறியதாக தகவல்கள தெரிவிக்கின்றன.   

மேலும் தேசியவாத காங்கிரஸ் எம்பியும் சரத் பாவாரின் மகளுமான சுப்ரியா சூலேயும் உத்தவ் தாக்கரேயின் மனைவியுடன் இதுகுறித்து பேசிவந்திருக்கிறார். 

உத்தவ் தாக்கரேயை முதல்வராக நிற்க செய்தால் தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் ஆதரவு பெற்று தருவதற்கு சரத் பவார்  உத்தரவாதம் கொடுத்ததாகவும் பெயர் வெளியிட விரும்பாத தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். 

இந்தத் தேர்தலுக்குமுன் அமலாக்கத் துறை சரத் பவாருக்கு நோட்டீஸ் அனுப்பியதிலிருந்து மகாராஷ்டிராவின் தேர்தல் களம் சூடுபிடித்தது . உள்ளங்கையில் இருக்கும் கோடுகள் பற்றி தெரிந்திருப்பது போல் சரத் பவாருக்கு மகாராஷ்டிரா பற்றித் தெரியும். மகாராஷ்டிரா மக்களைப் பற்றியும் அவருக்கு நன்றாகவேத் தெரியும். நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சரத் பவாரின் நம்பிக்கை உத்தவ் தாக்க்ரேக்கு கிடைத்திருக்கிறது. அதனால்தான் உத்தவ் தாக்க்ரே பாஜகவுடனான கூட்டணியை முறித்திருக்கிறார் என்று மும்பை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் (political science ) துறையின் பேராசிரியர் சுரேந்திரா ஜோன்ஹேல் கூறியுள்ளார். 

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க எங்களிடம் போதிய எம் எல் ஏக்கள் இல்லை என்று பாஜக கூறுவதற்கு மூல காரணம் தலைமை சூத்ரதாரி    சரத் பவார்தான்  என்றும் சுரேந்திரா ஜோன்ஹேல் கூறுகிறார். 

 அமித் ஷாவின் ஆட்சியமைக்கும் திறனை மகாராஷ்டிராவில் நான் பார்க்க வேண்டும் என்று நக்கலாக ஒருமுறை சரத் பவார் ஊடகங்களிடம் பேசும்போது தெரிவித்திருந்தார்.    

ஆட்சியமைக்க போதுமான எம் எல் ஏக்கள் இல்லாத போதும் ஆப்ரேஷன் கமலா என்பதை அமல்படுத்தி குதிரை பேரம் பேசி ஆட்சியமைத்து விடுவார் அமித் ஷா. ஆனால் இங்கே மகாராஷ்டிராவில் இந்தியாவின் மிகப் பெரிய கட்சியான பாஜக எதிர்க்கட்சிகள் வரிசையில் உட்காருகிறது. சரத் பவாரின் உத்தி (அரசியல் தந்திரம்)  மற்றும் உத்தவ் தாக்கரேயின் கடுமையான நிலைப்பாடும்தான் இதற்கு காரணம் என்றும்  சுரேந்திரா ஜோன்ஹேல் கூறுகிறார்.  

அமலாக்கத்துறைதான் சரத் பவாருக்கு கருவி .  தேர்தலுக்குமுன் அமலாக்கத்துறையின் நோட்டீஸை எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்து அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார் சரத் பவார். உண்மையான கள மோதல் இரண்டு அரசியல் சாணக்கியர்களுக்குதான்  அதாவது பாஜக தலைவர் அமித் ஷாவுக்கும் தேசயவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கும்தான். தற்போது சரத் பவார் எதிர்க்கட்சியாக இருந்துக் கொண்டு  பாஜகவை எப்படி எதிர்க் கொள்ள வேண்டும் என்று மற்ற எதிர்க்கட்சியனருக்கு காட்டியிருக்கிறார் என்று  அரசியல் ஆய்வாளர் பிரதாப் அசபே கூறியிருக்கிறார். 

by Sudhir Suryawanshi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here