30 வருசமா பிரச்சனை இல்லாமல் தொழில் பண்றேன்; அமுல் பேபின்னா ரூ4.25 லட்சம்; குழந்தைகளை விற்கும் நர்ஸ் (ஆடியோ உள்ளே)

0
250

ஆண்குழந்தைக்கு ரூ.4 லட்சம், பெண்குழந்தைக்கு  ரூ.3 லட்சம் ; கடவுள் அருளால் 30 ஆண்டுகளாக பிரச்சினை இல்லாமல் தொழில் செய்கிறேன் என்று பிஞ்சு குழந்தைகளை பல ஆண்டுகளாக விற்பனை செய்து வரும் ஓய்வு பெற்ற நர்ஸ்  ஆடியோவில்  பேசுகிறார். 

 நர்ஸ் பேசும் இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது அந்த நர்ஸை போலீஸார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாமக்கல் ராசிபுரத்தில் குழந்தை இல்லாத ஒருவர் இதுகுறித்து விசாரிக்க குழந்தைகளை சட்டவிரோதமாக விற்பனைச் செய்யும் ஒரு பெண் நர்ஸின் தொடர்பு கிடைத்த போது பேசும் ஆடியோதான் இது. அவர் கூறிய விபரங்கள் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இதனால் மிரண்டுப்போன அவர் அந்த ஆடியோவை வலைதளத்தில் கசியவிட அது பெரும் வைரலாகி உள்ளது.

இது சம்பந்தமாக போலீஸார் கவனத்திற்கு வர அந்த நர்ஸை விசாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் வைரலானதை அடுத்து இதுகுறித்து புகார் அளிக்க சுகாதாரத்துறைச் செயலர் பியூலா ராஜேஷ் மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குனருக்கு உத்தரவிட்டுள்ள அடிப்படையில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஆடியோவில் உள்ள குரலுக்கு சொந்தக்காரப்பெண், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் 10 ஆண்டு காலம் செவிலியராக பணியாற்றி 2 ஆண்டுகளுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்ற அமுதா என்பவர் என்றும், இவர் தரகராக இருந்து குழந்தைகளை வாங்கி, விற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

அந்தப்பெண் பேசும் ஆடியோ பதிவில்:

“30 வருடமா செய்கிறேன் கடவுள் புண்ணியத்தில் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. பெண் குழந்தை என்றால் ரூ.2.70 வரைக்கும் பண்ணுங்க. வெள்ளையா 3 கிலோ எடைவரை இருந்தால் 3 லட்சம்வரை பண்ணலாம்.

ஆண்குழந்தை கருப்பாக இருந்தால் 3 லட்சம்வரை முடித்து தருகிறேன். வெள்ளையா கொழுகொழுன்னு அமுல்பேபி மாதிரி இருந்தால் 4 லட்சம் முதல்  4.25 லட்சம் வரை பண்ணுவாங்க”   என்கிறார்.

இந்த பெண்ணின் பின்னணியில் உள்ள கும்பல் வெளிமாநிலங்களிலிருந்தும் குழந்தைகளை திருடிவந்து விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது தவிர உள்ளூரில் குழந்தைகளை திருடுவதும் அதை தொண்டு நிறுவனங்கள் மூலம் குழந்தைகள் இல்லா தம்பதிகளுக்கு விற்பதாகவும் கூறப்படுகிறது.

30 ஆண்டுகளாக ஒரு பெண் தனியாக தொழில் செய்கிறேன் என்கிறார் என்றால் அவருக்கு பின்னணியில் இயங்கும் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தப்படவேண்டும் என்கிற கருத்தும்  எழுந்துள்ளது.

   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here