மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது ஒருவர் பரிமாறப்பட்ட உணவில் இறந்த எலி இருப்பதாக கூறியதால், அனைவரும் அதிர்ச்சிக்கு ஆளாகினார்கள்.

இதையும் படியுங்கள் : எடப்பாடியிடம் ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மகேஷ் சந்திர செளத்ரி, குற்றம் சாட்டப்பட்ட ஹோட்டலில் சோதனை நடத்த குழு ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும், சுகாதாரமற்ற முறையில் ஹோட்டல் சமையலறை செயல்பட்டால் நவடடிக்கை எடுப்போம் என்றும், ஆய்வு அறிக்கைகாக தாங்கள் காத்திருப்பதாகவும் உணவு அதிகாரி தேவிகா சன்வணி கூறியுள்ளார்.

https://www.youtube.com/watch?v=PHlOIA5beVc

இதையும் படியுங்கள் : மே 4 முதல் 29 வரை அக்னி வெயில்

இந்நிலையில் ஹோட்டல் மூத்த மேலாளர், “இது ஒரு நாடகம் என சந்தேகிக்கிறோம். நாங்கள் விருந்தினர்களின் கட்டணத்தைத் தள்ளுபடி செய்துவிட்டோம். இருப்பினும் அவர்கள் அழுது நாடகமாடுகிறார்கள். திருமண சமயத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் எங்கள் ஹோட்டலின் நற்பெயரை மக்கள் மத்தியில் கெடுப்பதற்காக எங்கள் போட்டியளர்கள் எடுக்கும் முயற்சி” என்று கூறியுள்ளார். மேலும் விருந்தினர்கள் மாவட்ட அதிகாரி மற்றும் காவல்துறையினரிடம் எந்தவித அதிகாரப்பூர்வமான புகாரையும் பதிவு செய்யவில்லை என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : விஜய பைரவா… ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியாகும் விஜய் படம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்