திரிபுரா, மேகலாயா மற்றும் நாகாலாந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை சனிக்கிழமை (இன்று) காலை எட்டு மணி முதல் நடைபெற்று வருகிறது.

திரிபுரா, மேகலாயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களும் தலா 60 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டவை. மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் கடந்த செவ்வாய்க்கிழமையும் (பிப்.27), திரிபுரா மாநிலத்தில் கடந்த பிப்.18ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை சனிக்கிழமை (இன்று) காலை எட்டு மணி முதல் நடைபெற்று வருகிறது.

காலை 10 மணி நிலவரப்படி, திரிபுரா மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 32 இடங்களிலும், பாஜக-ஐபிஎஃப்டி கூட்டணி 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. அதேபோன்று, நாகாலாந்து மாநிலத்தில் என்பிஎஃப் (Naga People’s Front) கூட்டணி 29 இடங்களிலும், பாஜக கூட்டணி 23 இடங்களிலும்; மேகலாயாவில் காங்கிரஸ் 19 இடங்களிலும், என்.பி.பி (National People’s Party) 11 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…