திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தலா 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி டெல்லியில் வியாழக்கிழமை (இன்று) அறிவித்தார். திரிபுரா மாநிலத்தில் பிப்.18ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்றும், மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பிப்.27ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் அறிவித்தார். மேலும் மூன்று மாநிலங்களில் பதிவான வாக்குகள் மார்ச் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளதால் மூன்று மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here